Wednesday, December 14, 2022

உண்மை #ஊழியனை #ஊரே #தூற்றுகிறது. #நயவஞ்சகனை #நாடே #போற்றுகிறது.

 நாம் நல்லது எண்ணியே அநேக செயல்கள் செய்கிறோம்.

ஆனாலும் நம்மை குற்றப் படுத்தும் வண்ணம் செயல்களின் விளைவுகள் சிலசமயம் அமைவதுண்டு.
அதன் காரணமாக நம்மை யாரேனும் பழி சுமத்தும் பொழுது நம்மால் அதை ஏற்றுக் கொள்ள இயலுவதில்லை.
மனித மனதின் இயல்பு அது. நாம் நமது செயலுக்கு பாராட்டு எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம்.
நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.
எல்லாவற்றிற் கும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும்.
காரணமின்றி ஏதும் நடைபெறுவதில்லை.
வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் அவரது அனுபவத்தை ஒருமுறை எழுதியிருந்தார்.
அவர் ஒருமுறை வெளியூர் பயணம் செய்ய வேண்டி வந்தபோது ஏதோ ஒரு காரணத் திற்காக அவர் செல்ல வேண்டிய விமானம் சற்று தாமதமாயிற்று.
சரி கொஞ்சநேரம் புக் படித்துக்கொண்டு உட்காருவோம்.
படிக்கும் போது கொறிப்பதற்கு கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கி வருவோம் என்று
அங்கிருந்த கடை யில் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு ஒரு காலி இருக்கையில் அமர்ந்தார்.
ஹாண்ட் பாக்கில் இருந்த புக்கை எடுத்துக் கொண்டு கொண்டு படிக்க ஆரம்பிக்கும் போது
தான் கவனித்தார்.
அடுத்த இருக்கையில் இருந்த ஸ்நாக்ஸை அதற்கு அடுத்த இருக்கையில் இருக்கும் நபர் மெல்ல பிரிப்பதை பார்த்து அதிந்தார் .
ஆளை பாத்தாலே இவருக்கு பிடிக்கவில்லை.
அதிலும் அடுத்தவர் பொருளை கொஞ்சமும் நாகரிகம் இன்றி எடுப்பதை கண்டு இவருக்கு வெறுப்பு.
அந்த ஆள் அதில் இருந்து ஸ்நாக்சை எடுத்துக் கொண்டு இவர் பார்ப்பதை கண்டு இவரிடம் நீட்டினான்.
இவருக்கு செம கடுப்பு நம்ம பொருளை நமக்கே தானம் செய்கிறானே என்று.
கோபத்துடன் வேகமாக அதில் இருந்து கொஞ்சம் எடுத்து விரைவாக சாப்பிட்டார்.
இவர் அதை கீழே வைத்ததும் அவனும் இவரை போலவே கொஞ்சம் எடுத்து விரை வாக சாப்பிட்டு சிரிப்போடு இவரை பார்த்தான்.
பழையபடி கோபத்தோடு இவர் அதில் இருந்து எடுத்தார்.
அவனும் அதே போல வேகமாக அதில் இருந்து எடுத்தான்.
விரைவில் ஸ்நாக்ஸ் தீர்ந்து விட்டது.இறுதியில் ஒரே ஒரு பீஸ் இருந்தது.
இவர் அதை வேகமாக எடுப்பதற்குள் அவன் அதை எடுத்து விட்டான்.
அதை எடுத்துக் கொண்டு ஒரு வெற்றி புன்னகை வேறு இவரை பார்த்து!.
இவருக்கு பயங்கர கோபம்.
அவன் புன்னகையுடன் அதை இரண்டாக உடைத்து பாதியை இவரிடம் நீட்டினான்.
இவர் அதை விரைவாக பிடுங்கி சாப்பிட்டார்.
அவன் புன்னகையுடன் காலி கவரை எடுத்துக் கொண்டு இவருக்கு அன்போடு குட்பை சொல்லிவிட்டு
அருகில் இருந்த குப்பை கூடையில் அந்த கவரை போட்டு விட்டு சென்றான்.
இவருக்கு புத்தகம் படிக்கவே மூடு இல்லை.
சரி என்று பையை திறந்து உள்ளே புத்தகத்தை வைக்கும் போது இவர் வாங்கிய ஸ்நாக்ஸ் பாக்கெட் உள்ளே இருப்ப தை பார்த்து அதிர்ந்தார்.
அப்படியானால் நாம் சாப்பிட்டது அவரது பொருளையா!
சே...எவ்வளவு அவமானம். நாம் அந்த ஆளிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டோம்.
ஆனாலும் அந்த மனிதன் கடைசி துண்டை கூட பாதியை பிரித்து நமக்கு கொடுத்தானே! .
எவ்வளவு உயர்ந்த மனிதன்.
அவரை போய் நம் தப்பாக எடை போட்டோமே! என்று குமைந்து போய் விட்டார்.
இந்த நிகழ்வு வெவேறு விதமாய் வேறு வேறு கதைகளாக இன்றும் தொடர்ந்து மக்களால் கூறப்படுகிறது.
வடிவேலு கூட இதே மாதிரி ஒரு மேங்கோ ஜூஸ் குடித்துக் கொண்டு இருக்கும் போது போன் வரும்.
பேசிக் கொண்டே பக்கத்து பலகையில் வைப்பதாய் எண்ணி டஸ்ட்பின்னில் போட்டு விடுவார்.
அடுத்து சிங்கமுத்து வந்து அதே மாதிரி ஒரு ஜூஸ் வாங்கி குடிக்கும் போது
இவர் தனது ஜுஸை தான் ஆட்டையை போட்டுவிட்டான் என்று பேசத் தெரியாது பேசி சிக்கலாகி விடும்.
நாமும் இப்படித் தான் எதையும் தவறாக எண்ணி அதையே உண்மை என்று நம்பி செயல் படுகிறோம் .
எனக்குகூட இப்படி ஒரு அனுபவம் அண்ணன் அடைக்கலராஜ் அலுவலகத்தில் நிகழ்ந்தது....
ஆர்சி பாபு சிவராஜ் சண்முகம் ஆகியோர் ஏற்பாட்டில் ஒரு பெண் அண்ணனிடம் வந்து நான் ரேசன்கார்டு வாங்கித்தருவதாய் சொல்லி இரண்டாயிரம் ரூபாய் வாங்கியதாகவும் ஆறுமாதமாக அலையவிடுவதாகவும் தவறான அர்த்தத்தில் பழகுவதாகவும் வந்து கண்ணீரோடு நின்றார்....
நல்லவேளை அந்தப்பெண்ணிற்கு ஜீகே முரளி என்று பெயரை சொல்லிக்கொடுத்தவர்கள் ஆள் யாரென்று காட்ட மறந்துவிட்டதால் நான் எம்பியோடு உட்கார்ந்திருக்கும்போதே
வந்து என்னைப்பற்றி குறை சொல்லி அழுதார்....
எம்பி அற்புதமான மனிதர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அந்தப்பெண்ணை அனுப்பிவிட்டு ஏற்பாடு செய்தவர்களை அழைத்து லெப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கினார்....
இது தெய்வகடாட்ஷம்...
நான் அந்த நேரத்தில் அவரோடு இல்லை என்றால் அப்போதே நான்
அவரின் அரசியல்குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பேன்...
பிறர் சொல்வதை எப்போதும் கேட்பதுபோல
பாவ்லா செய்யவேண்டும்
கேட்டுவிடக்கூடாது....
கேட்டால்கெட்டோம்!
அறிவை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரியாது தப்பு பண்ணி விடுகிறோம்.
சரியான முறையில் அறிவை பயன்படுத்த தெரியவேண்டும்
அப்போது தான் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
தவறான அறிவு தவறான புரிதலை தரும்.சரியான அறிவே உண்மையை அறியச் செய்யும்.
பிறர் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள்.
அதிலும் காகா பிடித்து காசு பார்க்கும் நபர்கள் சொல்வதை தலைவர்களாக இருப்பவர்கள் நம்பவே கூடாது....
நீங்களே நேரில் பேசி விசாரித்துவிடுங்கள்....
அதுதான் உங்களின் நீண்டகால அரசியலுக்கு நல்லது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...