புரட்சித்தலைவர் அண்ணா திமுகவை துவங்கிய சிலநாட்களில் ஆங்கிலபத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர் நீங்கள் திமுகவில் இருந்தபோது கருணாநிதியிடம் மந்திரி பதவி கேட்டதாகவும், அதற்கு நடிப்பு தொழிலை விட்டுவிட்டு வாருங்கள், தருகிறேன் என்று சொன்னாராம். அதற்கு நீங்கள் மறுத்து, கட்சி கணக்கை வெளியிடத்தில் கேட்டீர்களாம்..அதனால்தான் வெளியேற்றினோம் என்று கருணாநிதி கூறுகிறாரே? உங்கள் பதில் என்ன?
எம்ஜிஆரின் பதில்: நண்பர் கருணாநிதி நன்றாக கதையும், வசனமும் எழுதுவார். நான் 1967ல் பரங்கிமலை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவன். அப்போது மருத்துவமனையில், எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் என்னை சுட்ட சம்பவத்தினால் சிகிச்சையில் இருந்தேன். திமுக மாபெரும் வெற்றி பெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் யாரையெல்லாம் மந்திரிகளாக போடுவது என்பது பற்றி எனது கருத்தையும், ஆலோசனையையும் அறிய ஒரு பட்டியலை கொடுத்தனுப்பினார். அதில் ஒரு சிறிய மாற்றத்தை நான் சொன்னபடி செய்தார். நான் நினைத்திருந்தால் அண்ணா அமைச்சரவையிலே அன்றே மந்திரி பதவி பெற்றிருக்க முடியும். எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் வரவில்லை. மேலும் கேபினட் அந்தஸ்துக்கு நிகராக சிறுசேமிப்பு திட்ட துணைத்தலைவர் பதவி அண்ணாவால் எனக்கு வழங்கப்பட்டது.
அண்ணாவின் மறைவிற்குப் பின் அவரது பெயர், புகழை இருட்டடிப்பு செய்வது, கருணாநிதியின் பெயரை மட்டுமே முன்னிறுத்துவது, கட்சியின் எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் உட்பட பலர் சொத்துக்களை தவறான வழியில் சேர்ப்பது போன்றவை என் காதிற்கும் வந்தது. காமராஜர் உட்பட பல தலைவர்கள் திமுகவின் ஊழலைப் பற்றி விமர்சிக்க தொடங்கினார்கள். மேலும் கட்சியின் பொருளாளர் பதவியில் உள்ள எனக்கு தெரியாமலேயே பெரிய தொகை ஒன்று தனிப்பட்ட நபருக்காக எடுத்து செலவு செய்யப்படுகிறது. காரணம் கேட்டால் பதில் இல்லை. இதுபோல் தொடர்ந்து நடக்கவே நான் விளக்கம் கேட்டேன். பதிலில்லை. பிறகு திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எனது கேள்வியை வெளியிட்டேன்.. என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள். அப்போதே மந்திரி பதவி கேட்டார் எம்ஜிஆர் என்று கூறியிருக்கலாமே!
மேலும் கருணாநிதி முதல்வராக ஆனதும் அவரும், முரசொலி மாறனும் இன்சால்வன்ஸி மற்றும் கடன் தொல்லையிலிருந்து விடுபட என்னை ஒரு படத்தில் நடித்துதரச் சொன்னார்கள். எங்கள் தங்கம் என்ற அவர்கள் குடும்பத்தின் சொந்த படத்தில் நானும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தேன். அதில் கிடைத்த பணத்தில்தான் கடனிலிருந்து தங்கள் குடும்பம் மீண்டதாக எனக்கு நன்றி தெரிவித்து கருணாநிதியின் மருமகன் மாறன், கருணாநிதி ஆகியோர் முரசொலி ஏட்டிலேயே எழுதியுள்ளார்கள்.
எங்கள் தங்கம் படத்தினை தயாரித்த கருணாநிதி அப்போது முதலமைச்சர் இல்லையா? இவ்வாறு பதிலளித்துள்ளார் மக்கள் திலகம்.
No comments:
Post a Comment