சிவயநம என்பது சூக்ம பஞ்சாக்கரம்,
சிவய சிவ என்பது அதிசூக்ம பஞ்சாக்கரம்,
சிவசிவ என்பது காரண பஞ்சாக்கரம்,
சி என்பது மகாகாரண பஞ்சாக்கரம். இதைச் சொல்ல நாள் கிழமை நேரம் பார்க்க வேண்டியதில்லை. எப்போது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் குரு அருள் பெற்று ஜபித்து பயன் பெறலாம்.
சி- பேசா எழுத்து
வ- பேசும் எழுத்து
சூட்சமம்-காணமுடியாதது. -சிவயநம என மனதுக்குள் சொல்லி தியானித்தால் மனதில் உறைவார்.
ஸ்தூல-கண்ணால் காணக்கூடியது. -நமசிவய என சொல்லி உச்சரித்தால் ஈசன் கண்களுக்கு புலப்படுவார்.
நமசிவய என்கிற பஞ்சாக்கரத்துடன் முன்பு ஓங்காரத்தை சேர்த்து சொல்லும்போது அதன் சக்தி அதிகரிக்கப் படுகின்றது. அப்படி பஞ்சாக்கரத்துடன் ஓம் சேர்த்து ஓம்நமசிவய எனச் சொல்வது சிவஷடாக்ஷரி மந்திரம் எனப்படும்.
எல்லோரும் சொல்லுங்கள்.
சி- சிவம்
வ- திருவருள்
ய-ஆன்மா
ந-திரோதமலம்
ம-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும்
பொருள். "நான்" என்ற ஆணவ அழுக்கை
பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் இதன் பொருள் என்பது முன்னோர் வாக்கு.என்பது ந்தியோஜாதம் - படைத்தல் - பிரம்மா - தம்பனம் - பூமி - கேட்டல் - "ந"
வாமதேவம் - காத்தல் - பெருமாள் - பேதனம் - தண்ணீர் - தொடு உணர்வு - "ம"
அகோரம் - அளித்தால் (கொடுத்தல் ) - ருத்ரன் -.மோகனம் - தீ - பார்த்தல் - "சி"
தத்புருஷம் - சாந்தம் - மகேஸ்வரன் - மாரணம் - காற்று - சுவை அறிதல் - "வ"
ஈசான்யும் - அனுக்ரஹம் - சதாசிவம் - ஆகர்ஷணம் - ஆகாயம் - சுவாசித்தல் - "ய"
ந - காது
ம - தோல் (தீண்டுதல் உணர்வு )
சி - கண்
வ - நாக்கு
ய - மூக்கு
இப்படி 5 செயல்களை உள்ளே அடக்கியது, அல்லது 5 செயல்களை கொண்ட சிவபெருமானின் அட்சரம் என்று சொல்லலாம்.
"ஓம் ந-ம-சி-வ-ய" என்று சொல்வதின் மூலம் உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களையும் பெறமுடியும்.
"ஓம் சி-வ-ய-ந-ம" என்று சொல்வதின் மூலம் கோள்களின் சாபம் விலகும்
அம்மையப்பனின் தரிசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்சிற்றம்பலம் #🕉ஓம் நமசிவாய #🇮🇳🙏பக்திபடம்🙏வாழ்த்து💐🇮🇳 #🙏🏼ஹிந்து கடவுள்.
No comments:
Post a Comment