Sunday, May 7, 2017

வெளிநாட்டில் "கமிஷன்" வாங்கிய காமராஜர் !

தமிழ்நாட்டிற்கு மின்சார வசதி கிடைக்கப்பெற்ற காலம். மின்சார வசதியை மக்களுக்கு அளிப்பதற்காக மின்மாற்றிகள் (Transformers) வாங்க வேண்டிய கட்டாயம். இந்தியாவில் அவை அப்போது தயாரிக்கப்படவில்ல. போலந்து நாட்டில் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகளை அந்நாட்டிற்கு அனுப்புகிறார் தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் காமராஜர்.
50 மின்மாற்றிகள் வாங்கத் திட்டம், அவ்வளவுதான் பணமும் கொண்டு சென்றார்கள்.
50 மின்மாற்றிகளுக்கு ஆர்டர் கொடுத்தபோது மின்மாற்றி நிறுவனம், தமிழ்நாட்டின் அதிகாரிகளிடம், நீங்கள் 50 வாங்குவதால் இதற்கு நாங்கள் கமிஷன் (கட்டிங்) தருவது வழக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள், அந்தக் கமிஷன் தொகையும் எவ்வளவு என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்து தொலைபேசி வாயிலாக முதல்வர் காமராஜரிடம் தொடர்பு கொண்டு, "அய்யா இவ்வளவு மின்மாற்றிகள் வாங்குவதால் அவற்றை வாங்கும் நமக்கு கமிஷன் தருவேன் என்கிறார்கள், அந்தப் பணத்தை நாங்கள் என்ன செய்யட்டும் " என்று கேட்க....
அதைக்கேட்ட காமராஜர்..."அடடே அப்படியா, நல்லது ...அந்தத் தொகைக்குக் கூடுதலா 20 மின்மாற்றிகள் வாங்கிட்டு வந்துடுங்க, நம்ம மாநிலத்துல இன்னும் பலபேர் பயனடைவாங்களே" என்று உத்தரவிட்டுள்ளார் காமராஜர். அதன்படி 70 மின்மாற்றிகள் வாங்கப்பட்டன.
அந்த அதிகாரிகளும், காமராஜரும் நினைத்திருந்தால் அந்தக் கமிஷன் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் தங்கள் பெயரில் போட்டு வைத்திருக்க முடியும்.
மக்கள் வரிப்பணத்தின் மீது காமராஜரும், அவரது அதிகாரிகளும் கொண்டிருந்த நன்மதிப்புக்கு இதைவிட என்ன சான்று இருக்கமுடியும்.
-இந்த நிகழ்வை, 30.4.2017 அன்று சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சன அமர்வில், அண்ணா பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளர் சோலையின் நண்பருமான "அண்ணா" நாராயணன் பகிர்ந்து கொண்டார்.
காமராஜர்....ஒரு சகாப்தம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...