Sunday, May 7, 2017

திருப்பூரில் பைக்கை துரத்திய போலிசார், சம்பவ இடத்திலயே பரிதாபமாக பலியான சுரேஷ், உறவினர்கள் அந்த இடத்திலயே போராட்டம்.

திருப்பூர் சென்னிமலைப்பாளையத்தில் தங்கி பணியாற்றி வருபவர் சுரேஷ், வேலை முடித்து, இவர் தனது நண்பருடன் பைக்கில் விடு திரும்பியுள்ளார்.
பைக் பல்லடம் மெயின் ரோடு அருகே வந்த போது இவர்களது பைக்கை வீரபாண்டி பிரிவில் போலிசார் துரத்தியுள்ளனர்.
இதில் நிலை தடுமாறி அருகில் இருந்த விளம்பர போர்டில் மோதி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவருடன் சென்ற நண்பர் படுகாமயடைந்துள்ளார். அவரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சுரேஷின் குடும்பாத்தார் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்து , வாகனங்களை துரத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தும் வசூல் வேட்டைக்காக இப்படி அப்பாவிகளின் உயிரை பலிவாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர்.
பலியானவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. சுரேஷ் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.
சுரேஷ் ஹெல்மட் அணிந்தே வண்டி ஓட்டியிருந்தது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...