எந்தவொரு தேர்வும் எழுத, பேனா, பென்ஸில், ஹால்-டிக்கெட் தவிர வேறெதுவும் தேவையில்லை! ஆனால், இந்த நீட் தேர்வு எழுத கூடுதலாக வேறெதுவும் தேவையா என்பது தெரியவில்லை!
இன்றைய தேர்வில், பல கெடுபிடிகள் செய்யப்பட்டதாக சொன்னார்கள்! (சன் செய்திகள்). துப்பட்டா, சேலை, கொண்டையூசி, ரப்பர் பேண்ட், முழுக்கைச் சட்டை, பெல்ட் இப்படி பலவற்றுடன் அனுமதி இல்லை என்று கூறியதால் பலரும் இவற்றை கழற்றி வெளியில் போட்டிருந்ததை காண முடிந்தது! போதா குறைக்கு ஆதார் நகல் கேட்டு திருப்பி அனுப்பினார்களாம்!
இவையெல்லாம் பார்த்தபோது, தேர்வு எழுதாத நமக்கே கோபம் வந்தது! மேற்கண்டவை எந்த விதத்தில் தேர்வை பாதிக்கும் என்பது தேர்வு நடத்தியவர்களுக்கே வெளிச்சம்! இவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிவித்திருந்தார்களா? Instructions to Candidates இல் இவை இடம்பெற்றிருந்ததா? நம்மவர்கள் அதை கவனியாது சென்றார்களா? இதெல்லாம் உண்மையில் தேர்வு வாரியம்தான் அறிவுறுத்தியதா? இல்லை, நீட் எதிர்ப்பாளர்கள் யாரேனும் இடையில் புகுந்து, அரசுக்கு கெட்டபேர் ஏற்படுத்த இப்படி செய்தார்களா? ஒரு வேளை நீட் எதிர்ப்பு விஷயத்தை பின்னுக்குத் தள்ள அல்லது திசை திருப்ப இப்படி அல்வ விஷயங்களை ஆள்பவர்களே தூண்டி விட்டார்களா? இந்நிலை தமிழகத்தில் மட்டும்தானா? மற்ற மாநிலங்களின் நிலவரம் என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன!
படிப்பது ஒரு தொல்லை என்றால், தேர்வு கூடத்திற்கு செல்வது பெரும் தொல்லையாக இருக்கும் போலிருக்கிறதே!
No comments:
Post a Comment