Saturday, May 6, 2017

பாஜகவின் டார்கெட் அதிமுக மட்டுமல்ல! திமுகவும்தான்!


ஜெ மறைந்த உடனேயே தங்களுக்கு அடக்கமாக இருக்கும் தம்பிதுரையை முதல்வராக்க பாஜக முயன்றது. முடியவில்லை. பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். 
*******
அவரை பொம்மை முதல்வராக வைத்தே காய் நகர்த்தலாம் என்று நினைத்தது பாஜக. ஆனால் சசிகலா குடும்பத்தினர் அதை முறியடித்தனர். ஆனால் ஓபிஎஸ் அணி தனி அணியாக உருவானது. அந்த அணியால் சசிகலா தலைமையை முறியடிக்க முடியவில்லை. அவருக்கு அந்த பலம் இல்லை என்பதை பாஜக உணர்ந்து கொண்டது.
******
எனவே ஆர்கே நகர் தேர்தலில் இறங்கிய தினகரனை இரட்டை இலையை முடக்கி பலவீனப் படுத்த முயன்றது. ஆனால் அவரது பணப்பட்டுவாடா அரசியல் அவரைக் கவிழ்த்து விட்டது. அவரை பணப்பட்டு வாடாவுக்கு தாராளமாக அனுமதித்து விட்டு, அதையே காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது.
*******
ஐடி அமலாக்கத் துறை வழக்குகளை திணித்து தினகரனையைும் அரசியலில் இருந்து அகற்ற திட்டம் தீட்டி அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. அதன் இன்றைய நடவடிக்கைதான் இரட்டை இலையை ரூ. 50 கோடி விலைகொடுத்து வாங்க திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டு. அவர் கைது செய்யப் படலாம் என்பதுவரை போய்க் கொண்டு இருக்கிறது.
******
சசிகலாவை சிறைக்கு அனுபபியாகி விட்டது. தினகரன் மீதும் அஸ்திரம் தயார்.
இந்த நிலையில்தான் இரு அணிகளும் இணைய தடையில்லை ஆனால் சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைக்க வேண்டும் என்ற புதிய கோஷம். இந்த இணைப்பு முயற்சியில் இறங்கி இருப்பவர் தம்பிதுரை.
*******
பாஜாகவின் இந்த மாற்றுத் திட்டம் வெற்றி பெறுமானால் அதிமுக பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்விக்கு தம்பிதுரை என்ற பதில் எந்த எதிர்ப்பும் இன்றி உடனே வந்து விடும். அவர் பொதுச் செயலாளரானால் யார் முதல்வர் என்ற கேள்வி மீண்டும் எழும். ஓபி எஸ்ஸும் இபி எஸ்ஸும் களத்தில் நிற்பார்கள்.
*******
இந்த நிலையில் இருபிரிவினருக்கும் பொதுவானவர் என்ற முழக்கத்துடன் தம்பிதுரை முதல்வராகலாம். பாஜக முதலில் போட்ட திட்டம் இறுதியில் இவ்வறு நிறைவேறி விடும். அவர் பொம்மை முதல்வராக பாஜகவுக்கு அடக்க மானவராக பரிணமிப்பார்.
*******
இந்த திட்டங்கள் எல்லாம் அ.திமுகவை அடக்குவதற்கானது மட்டுமல்ல. பாஜகவின் உள்நோக்கம் அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒருபக்கம் என்றாலும் மறுபக்கம் திமுக வளர்ச்சியையும் தடுக்க வேண்டும் என்பதே. பாஜகவின் இறுதி நோக்கம் அதன் டார்கெட் திமுக. அதன் மூலம் திராவிட இயக்கங்களை வீழ்த்தி, தமிழகத்தில் நுழைந்து விடலாம் என்பதே பாஜகவின் கணக்கு! .
******
இதற்கெல்லாம் கருணாநிதி வழியில் ஈடுகொடுப்பாரா திமுக செயல் தலைவர் ஸ்டாலின்?. பாஜகவுக்கு வழி கொடுக்குமா தமிழகம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...