Saturday, May 6, 2017

சசிகலா சார்பில் சீராய்வு மனு!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறை தண்டனை அனுப்பவித்து வரும் வரும் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுக்க கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளவரசி, சுதாகரன் தரப்பிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்தது போன்று தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மறு சீராய்வு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன என்று தகவல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...