Saturday, May 6, 2017

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்?...


மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில்தான் கழிகிறது. உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி (குறிப்பிட்ட வயதுவரை) பெறவும், தூக்கம் அவசியம்.


 இரவில் தூங்கும்போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கிறது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவது பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பற்றியும் சித்தர்கள் தங்கள் நூல்களில் கூறியிருக்கின்றனர்.

 தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்பவெப்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். இரவில் அதிக நேரம் விழித்தால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

''சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
 கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ்
 சிலரை நாயாய்ப் பன்நோய் கவ்வுமிராக்
 கண்டுஞ் சிலரை நம்பிக் காண்''.

இதன் விளக்கம்: இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் (உடலில்) சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்து தூங்கக் கூடாது.

இதனை அறிவியல் ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்பு தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக்கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் (பிராணவாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். மேலும் குப்புறப்படுத்து தூங்கக் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் உள்ளேயும், வெளியேயும் செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். (இதைதான் பழமொழியாக ''வரவுக்குத்தக்க செலவு'' என்று சொன்னார்கள். இந்த பழமொழி காலப்போக்கில் வேறுவிதமாக மாறிப்போனது). மேலும் உடலுக்கு தேவையான வெப்பக் காற்று அதிகரித்து பித்த நீர் அதிகரித்து உண்ட உணவுகள் எளிதில் செரிக்கும். இதயத்துக்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியே சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பன்னிரண்டு அங்குலம் சுவாசம் உள்ளேயும், வெளியேயும் செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு செரிக்காமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே. இதை நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...