ஒரு தடவை ஆந்திராவில் மஹா பெரியவா முகாமிட்டு இருந்த போது நடந்த சம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மஹான் சிறிய காமாட்க்ஷி உருவ சிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு எனக்கு புடவை கொடு... புடவை கொடு! என்று கூவினாள் ரகளை செய்தாள். அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாக காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது. பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொலையா? என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள். அமைதியாக அவளை பார்த்த மகான் அவர்களை பார்த்து கையமர்த்தி விட்டு ஒரு புடவையை கொண்டு வர சொல்லி அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய் விட்டாள்.
அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். அவள் பின்னாலேயே வேகமாக போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்த போது அவர் கன்னத்தில் யாரோ பளீர் என்று அறைந்தது போலிருந்தது அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வரசற்று நேரமாயிற்று. என்னடா... புடவை என்னாச்சுனு பார்க்க போனியோ?வந்தவ அம்பாள் டா மடையா என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டி காட்டினார் மஹாபெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ அதே இடத்திலதான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது!
தனக்கு என்ன தேவை என்று மஹானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
No comments:
Post a Comment