Sunday, June 11, 2017

மலைவாழ் மக்களை சந்திக்க செல்லும் கலெக்டர் எப்படி போவார் ?



நாலைந்து கார்களில் அதிகாரிகளுடன் செல்வார். ஆனால் திருவண்ணாமலை கலெக்டர் ப்ரஷாந்த் வட்னேரே அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அரசு பேருந்தில் செல்கிறார். இப்படி செய்ததில் லட்ச ரூபாய்க்கு மேல் செலவை மிச்சப்படுத்தி இருக்கிறார்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மணியக்காரரிடம் கூட தானே போன் செய்து நீங்கள் முடிக்கிறீர்களா அல்லது நான் முடிக்கட்டுமா என்று கேட்கிறார்.
Image may contain: 1 person, sitting
செக் டேம் அமைக்கும் பணியில் 2 மணி நேரத்துக்கும் மேல் வெயிலில் நின்று கல் , மண் சுமந்து செல்கிறார். மண்வெட்டியால் தோண்டி தூறு வாருகிறார்.
போலி டாக்டராக செயல்பட்டு கைதாகி பின் விடுதலை ஆகி அதே போலி மருத்துவம் செய்யும் ஆட்களை குண்டர் சட்டத்தில் போட யோசனை சொல்கிறார். இது போன்ற போலி டாக்டர்களால் பல உயிர்கள் குறிப்பாக திருட்டுத்தனமாக கருவை அழிப்பவர் அதிகம்.
நேர்மையானர். சூழல் பால் அக்கறை உள்ளவர். அரசு அதிகாரிகளின் பிரச்னையை தீர்க்கிறார். ஹீரோயிசம் காட்டாமல் தனது அதிகாரத்துக்கும் சட்டத்துக்கும் உட்பட்டு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
வாழ்த்துகள் ஸார். நீங்கள் திருவண்ணாமலைக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இதற்கு முன் ஒரு தமிழனோ திராவிடனோ கலெக்டராக இருந்தான். அவன் எப்படின்னு நான் சொல்ல விரும்பலை. உங்க கணிப்புக்கே விட்டு விடுகிறேன்!
......படித்ததில் பிடித்தது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...