பெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவை, நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இதன் காரணமாக அவர் தமிழக அரசியலில் குதிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் அரசியலை தொடங்கி, டி.ஆர்.எஸ் உள் ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு மாறி, கடைசியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் நடிகை விஜயசாந்தி.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில், விஜயசாந்தியும் அவரை ரகசியமாக சந்தித்துள்ளார். சுமார் 40 நிமிடம் வரை இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதிமுகவின் தற்போதைய நிலை, பொதுச்செயலாளர் பதவி, தமிழக அரசியல் உள்ளிட்ட விவகாரங்களை இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜயசாந்தியை தமிழக அரசியலுக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அவர் விரைவில் தமிழக அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் சசிகலாவை தொடர்ந்து டிடிவி தினகரனையும் விஜயசாந்தி சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அரசியலுக்கு வர காய் நகர்த்தி வரும் நிலையில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வந்த விஜயசாந்தியை களமிறக்க துணிந்து விட்டார் சின்னம்மா.
சின்னம்மா நினைப்பது: ஜெயலலிதா அக்கா சினிமாவில் ‘கவர்ச்சிக் கன்னியாக’ களமிறங்கி சாதித்தது போல், கடந்த 1980களில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிரடி ஆக்சன் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். காவல்துறை அதிகாரியாக விஜயசாந்தி நடித்த ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை நானும் அக்கா ஜெயலலிதாவும் வீடியோவில் பலமுறை பார்த்து ரசித்து வியந்துள்ளோம். ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது அரங்கேறிய அப்பல்லோ அலப்பறைகளின்போதே விஜயசாந்தி தமிழக அரசியலை ஆழம்பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அக்கா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எனக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, நான் முதல்வராக வேண்டும் என்று பேட்டி அளித்தார். அக்கா ஜெயலலிதா போலவே வசீகரமும் அழகும் உள்ள விஜயசாந்தியே புதிய புரட்சித்தலைவி, நான் சின்னம்மா போல் விஜயசாந்தி புரட்சிதலைவி ‘சின்னஅக்கா’ வை களமிறக்குவதன் மூலம், தமிழகத்தில் வாழையடி வாழையாக இருக்கும் சினிமா(யை) அரசியலை வளர்ப்பதோடு, ‘மன்னன்’ ரஜினிகாந்தை மண்டியிட வைத்த ‘சண்டிராணி’யை வைத்து அரசியலில் அதிமுக புதிய சரித்திரத்தை எழுதப் போகிறது.” இது தான் தற்போது சசிகலாவின் எண்ணமாக உள்ளது.
No comments:
Post a Comment