Thursday, June 15, 2017

அற்புதம் அருளும் திருவானைக்கோவில் அன்னை அகிலாண்டேஸ்வரி கோவில்:



🌻இத்திருக்கோவிலுக்கு வருகை புரிந்த மகான்கள் ஆதிசங்கரர் காஞ்சி மகா பெரியவர் அருணகிரிநாதர்.
🌻வாழ்வில் ஒருமுறையாவது அவசியம் செல்ல வேண்டிய அழகிய சிற்பங்களுடன் கூடிய மிகப்பெரிய பிரகாரங்களுடன் அருளை அள்ளி தருகின்ற அற்புதமான கோவில்.
🌻அம்பாள்,ஜம்பு முனிவர்,யானை,சிலந்தி, ஆகியோர் சிவனை வழிபட்ட திருக்கோவில்.
🌻அம்பாள் நீரில் சிவலிங்கம் செய்து வழிபட்டதால் இது பஞ்சபூத தலங்களில் நீர் தலம்.
🌻அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம்
🌻ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஒன்பது அடுக்குகளை கொண்ட
மேற்கு கோபுரமே ராஜ கோபுரம்..!
🌻பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்டவை..
சுவாமி மேற்கு நோக்கியும்,
அம்பாள் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.
🌻நான்காவது பிராகார மதிற்சுவருக்குத் 'திருநீற்றான் மதில்' என்று பெயர்.
ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.
🌻இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
🌻கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்ட நிலையில் அப்புண்ணியப் பேற்றால் திருப்பணி செய்த கோயில்.
🌻சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்து காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்ட. லிங்கத்தில் சிவன் எழுந்தருளி அன்னைக்குக் காட்சி தந்தார்.
சிவனை வேண்டி தவமிருந்த ஜம்பு என்னும் முனிவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
🌻நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.
🌻பிரம்மோத்சவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர்.
🌻பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் ஆதலால்
மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.
சக்தி பீடங்களில் ஒன்றான அகிலத்தை (உலகம்) காப்பவளாக
அம்பிகை அருளுவதால், “அகிலாண்டேஸ்வரி” என்றழைக்கப்படுகிறாள்.
🌻அகிலாண்டேஸ்வரி,ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில்
பூஜிப்பதாக ஐதீகம்.
🌻மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு
அம்பாள் சன்னதி திரும்புவார்.
🌻இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம்.
இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து வணங்குகின்றனர்.
🌻ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம்.
🌻கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி
 அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.
🌻ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்,
பள்ளியறை பூஜை கிடையாது.
ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர்,
மீனாட்சியே செல்கின்றனர்.
🌻வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில்
வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார்.
அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். , வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்துகொள்கிறேன்” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார்.
அதே நாளில் கோயிலுக்கு வந்த வரதர் என்ற பக்தர் ஏற்க பிரபலமான கவி காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம்
பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.
🌻முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய அபூர்வம். நிலையில் காட்சி தருகிறார்.
🌻சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.
🌻அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் விளங்குகிறது.
🌻ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் அன்னாபிஷேகம் செய்யவது சிரமம்.
வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருப்பதால் அன்னாபிஷேகம் செய்கின்றனர்.
ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக் காப்பிடப்படுகிறது.
மதுரையைப் போல, சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து
திருவிளையாடல் நிகழ்த்தினார்.
🌻நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு.
🌻சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்” என்றும், பிரகாரம்
“விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்த விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.
🌻கோச்செங்கட்சோழன் :கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்து. பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர்.
 மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்து சிவனை வழிபடுவதிலும் போட்டி உண்டாகவே சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது.
சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மறு பிறவியில் சோழ பேரரசனாக பிறக்கும் பாக்கியத்தை அருளினார்...
🌻சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்து. , கோச்செங்கட்சோழ மன்னர் எனப் பெயர் பெற்றார்..
ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தால் சோழ குலம் மேன்மேலும் விருத்தியாகும்..என குழந்தையின் ஜனன கால பலன்கள்.கூறினர் அரண்மனை ஜோதிடர்கள்.....
🌻குழந்தை ஒரு நாழிகை கூடுதலாக,இயற்கைக்கு மாறாக தாயின் கருவறையில் இருந்ததால் பனிக்குட நீர் அவன் கண்களில் புகுந்து பிறக்கும் போதே கண்கள் சிவப்பாக பிறந்து செங்கண்ண சோழன் என்று பெயர் பெற்றார்..
🌻முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.
🌻சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டி யானை புகாதபடி திருப்பணி செய்த மன்னனுக்கு சன்னதி இருக்கிறது.
🌻ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர்.
🌻ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள்.
உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
வினாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்று பெயர். மனசாந்தி வேண்டுவோர் வழிபடுகிறார்கள்.
🌻வேண்டியவர்களுக்கு வேண்டியதை தரும் சக்திவாய்ந்த தலம்.இப்பதிவினை படித்த அனைவருக்கும் அன்னையின் அருள் கிட்டடுமாக!! நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா!!
🌻வழித்தடம் திருச்சியில் இருந்து சுமார் 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 
Image may contain: 1 person, smiling, indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...