பெண் வாசகர் - ஆசிரியரியருக்கு வணக்கம்...
சோ சார் -வணக்கம்
பெண் வாசகர் - தமிழகத்தின் இன்றை அரசியல் சூழலில் உங்களை போன்றவர் கவர்னராக இருந்தால் நல்லாருக்குமே..அணைத்து வாசகர் சார்பில் இதை மத்திய அரசிற்கு கோரிக்கையாக வைக்கிறேன் ...(கைதட்டல்)
சோ சார் - பெண்களுக்கு தான் என் மேல என்ன ப்ரியம்..(ம்ஹூம்ம்) ….( சிரிப்பொலி) ...
.அவ்ளோ ஆத்திரம்...( சிரிப்பொலி)
.அவ்ளோ ஆத்திரம்...( சிரிப்பொலி)
தினகரன் வருவார் ..என்ன சி.எம் ஆக்கிடுங்கன்னுவார் ...உங்களுக்குத்தான் பெரும்பான்மை இல்லையே ..32 பேர் தானே இருக்காங்கன்னு சொன்னா..அந்த 32 இல்லாம எடப்பாடிக்கும் பெரும்பாண்மை இல்லையே ..(பலத்த சிரிப்பொலி) அதனால என்ன சிஎம் ஆக்கிட்டீங்கன்னா...எல்லாரும் வந்துருவாங்கனுவார்...(பலத்த சிரிப்பொலி)
அடுத்து எடப்பாடி வருவார் ..எனக்கே எத்தனை பேர் ஆதரவுனு தெரியல (பலத்த சிரிப்பொலி)..டிவில லாம் 90 பேர்னு சொல்ராங்க ..அவ்வளவு இருக்கும் போல ..பலத்த சிரிப்பொலி)...எப்படியும் தினகரனை விட நிறைய பேர் இருக்காங்க ..so நானே இருந்துக்கிறேன் ..அப்டின்னுவார்..
ஓ.பி.எஸ் வருவார் ..எனக்கு 140 பேர் ஆதரவு இருக்கு ...அப்பிடியா..ஆமா ..ஆனால் ஒரு சிக்கல் …அதுல 130 பேர் முன்னாள் எம்.எல்.ஏக்கள்.(பலத்த சிரிப்பொலி).எதாவது பண்ணி என்ன சி எம் ஆக்குங்கனு சொல்வார்.(பலத்த சிரிப்பொலி)..
ஸ்டாலின் வருவார் ...இந்த சட்டசபைய கலைச்சுருங்க....ஒருத்தரும் என் பக்கம் வரல.... அப்புறம் எதுக்கு சட்டசபை....(பலத்த சிரிப்பொலி)
இத கலைச்சுருங்கனுவார் ..
இத கலைச்சுருங்கனுவார் ..
இன்னொருத்தர் வருவார் ...சார் நான் சசிகலாவோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட ,மச்சினனோட தம்பி(பலத்த சிரிப்பொலி)...நம்மக்கிட்டயும் கொஞ்சப்பேர் இருக்காங்க..ஆனால் எத்தனை பேர்னு இப்போ சொல்ல முடியாது ..அது பரம ரகசியம் (பலத்த சிரிப்பொலி)..சி.எம் ஆக்கிட்டீங்கன்னா எப்படியாவது சபைல நிரூபிச்சுரலாம் .. ..(பலத்த சிரிப்பொலி)...
இதல்லாம் தேவையா எனக்கு ...
வாசகர் கேள்வி - மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்...
சோ சார் - வணக்கம் ..
வாசகர் -இதுபோன்ற விழாக்களை தொடர்ந்து இன்னும் 100 வருடங்கள் நீங்கள் நடத்தவேண்டும் (பலத்த கைதட்டல்)என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...செயல் தலைவர் ஆனபின் ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி ?
சோ சார் - அதென்ன கஞ்சத்தனம்...100 வருஷம் ..சொல்றதுன்னு முடிவயிடுச்சு ..ஒரு 500 ,1000 வருஷம்னு சொல்றதுதானே..(சிரிப்பொலி)....(ம்ஹும் ..) ...
கலைஞர் என்ன பண்ணுவார்...எல்லோரையும் கூப்பிடுவார் ...ஒரு விஷயத்தை சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்பார் ..ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்லுவாங்க ..எல்லாத்தையும் கேட்டு வச்சுப்பார் ..அப்புறம் அவருக்கு முதல்ல தோணினத செஞ்சுருவார்..
அப்புறம் எதுக்கு இதனை பேர்ட்ட கன்சல்ட் பண்ணினார்னா ...தன் முடிவுக்கு எதிரா எத்தனை கருத்து இருக்குனு தெரிஞ்சுக்க தான்(சிரிப்பொலி)
...வெளிலருந்து நாளைக்கு யாராவது எதிர்த்தா..அதுக்கு என்னலாம் பதில் சொல்லலாம்னு தயார் பண்ணிக்குவார்(சிரிப்பொலி).
.
ஸ்டாலினும் தன்னை சுத்தி இருக்கவங்க கிட்ட ஆலோசனை கேக்குறார் ..அதுலயே ஒரு முடிவு எடுத்துர்ரார்...
.
ஸ்டாலினும் தன்னை சுத்தி இருக்கவங்க கிட்ட ஆலோசனை கேக்குறார் ..அதுலயே ஒரு முடிவு எடுத்துர்ரார்...
அவர் இன்னும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள இருக்கிறார்னு நினைக்கிறன் ...கொஞ்சம் broad da திங்க் பண்ணினா இன்னும் நல்லா பண்ணலாம்...
வாசகர் கேள்வி - உங்களை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த பாஜக முயற்சி செய்யவில்லையே ஏன் ?(பலத்த கைதட்டல்)
சோ சார் - ஒருத்தர் கவர்னர் ஆகலாமே..அப்டினார் ..இவர் ஜனாதிபதி ஆகலாமே..அப்படிங்கிறார் ..
ஒன்னு புரியுது ..என்ன எல்லாரும் எப்படி நினைக்கிறிங்கனு...
...சும்மாதானே இருக்கே ...(சிரிப்பொலி)..
...சும்மாதானே இருக்கே ...(சிரிப்பொலி)..
இதுமாதிரி பதவில போய் உக்காரலாமே..அங்கேயும் ஒன்னும் பெரிசா வேலை இருக்காது (சிரிப்பொலி) அப்படினு நெனைக்கிறாங்க போல ...
.பாஜக ஏன் உங்கள ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலைனு கேட்டார் ...யாராவது தனக்கு தானே கெடுதல் பண்ணிப்பாங்களா (சிரிப்பொலி)....
அது போக எனக்கு நிறைய வேலை இருக்கு சார் (பலத்த சிரிப்பொலி)...
வேலை இல்லாதவங்கதான் ஜனாதிபதி பதவிக்கு நிப்பாங்களானு கேக்காதீங்க (பலத்த சிரிப்பொலி )....
வேலை இல்லாதவங்கதான் ஜனாதிபதி பதவிக்கு நிப்பாங்களானு கேக்காதீங்க (பலத்த சிரிப்பொலி )....
அப்படி நான் சொல்லல ...எனக்கு வேலை இருக்குனு சொல்றேன்(சிரிப்பொலி)
No comments:
Post a Comment