ஜூலை 1முதல் ஜி எஸ் டி வரிவிதிப்பு நடைமுறையில் . இன்னும் வரிவிதிப்பு செய்யப்போகும் அதிகாரிகளுக்கும் தெளிவில்லை. வரி செலுத்தப் போகும் வணிக நிறுவனங்கள் அதைவிட குழப்பத்தில்.
தொழிற்சாலைகளை, வணிக நிறுவனங்களை(75லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யும் அனைத்து வியாபாரமும், 20லட்சத்துக்கு மேல் 'சேவை வருவாய்'(service charge) உள்ள நிறுவனங்களும்)' வழிமுறைப் படுத்த 'போவது மத்திய அரசு அதிகாரிகளா இல்லை மாநில அரசு அதிகாரிகளா என்பதை இனிதான்'குலுக்கல்' முறையில் கணினிகள் தீர்மானிக்கும்.
மத்திய, மாநில வரிகள்(50% 50%) சதவீதம் அடுத்த வாரம்தான் இறுதி செய்யப்படுகிறது. ஜூலை மாதத்திற்குள் நிறுவனங்கள் , அதிகாரிகள் செய்ய வேண்டிய அவசர காரியங்களை சொல்லி மாளாது. என்ன நடக்க போகிறது என்பது மட்டும் தெளிவு.
இன்னொரு "டிமானிடைசேஷன்". ஆனால் இந்தமுறை கண்ணீர் விடப்போவது நடுத்தர தொழில் முனைவோரும், பெரும் நிறுவனங்களின் கணக்காளரகளும், விற்பனைப் பிரிவு ஊழியர்களும்.
ஆஹா ஆபத்து என்று ஆங்காங்கே கூச்சல் , போராட்ட அறிவிப்புகள் எழும்.
மோடியும் அவரது ஜால்ராக்களும் நாட்டை வளமான பாதையில் இட்டுச் செல்வதுபற்றி பிரசங்கம் செய்வார்கள் . டைம்ஸ் நவ் நவிகாவும், ரிபப்ளிக்கில் அர்னாப்பும் 'தேசபக்தி' வகுப்புக்கள் எடுப்பார்கள் .
ஜனாதிபதி தேர்தல் முடிந்து தமிழ்நாட்டில் அரசியல் குழப்பமடைந்து, ஆட்சி கலைந்து அல்லது சட்டமன்றம் "தொங்கும் ". இந்தியாவின் கவனத்தைத் திருப்ப யோகி அதித்யநாத் ராமர் கோவிலுக்கு பூமிபூஜை போடுவார்.
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது காஷ்மீரும் பாகிஸ்தானும் .
சமஸ் சொல்வதுபோல் திசைதிருப்புவதில் மன்னர்கள்தான் சங்க பரிவாரங்கள், ஆனால் அவர்களின் பாதையே அழிவை நோக்கியது என்பதை அவர்களுக்கு எப்படிச் சொல்வது. கேள்திறனும், விரல் மொழியும் அறியா வீணர்கள்.
ஆனால் நம்பிக்கையோடு சொல்ல முடியும் இந்த ஜி எஸ் டி தான் மோடியின் "வாட்டர்லு". அழிவின் ஆரம்பம்.
No comments:
Post a Comment