Wednesday, July 12, 2017

பட்டீஸ்வரர் மகிமை!!!!

ஒரு முறை திருஞான சம்மந்தர் திருவலஞ்சுழியில் சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின் தமது பரிவாரங்களுடன் பட்டீஸ்வறரை காண இங்கு வந்து கொண்டு இருந்தார். கடுமையான வெயில். கால்கள் சுட்டுப் பொசுக்கின. அவருடைய பக்தியை மெச்சிய சிவபெருமான் தனது பூத கணங்களை அனுப்பி அவர் வரும் வழியில் அவர் தலை மீது ஆகாய மார்கத்தில் பூக்களை தூவிக்கொண்டே இருக்குமாறு ஆணையிட்டார். அந்த கணங்களும் அப்படியே செய்ய வெயில் திருஞான சம்மந்தர் மீது படவே இல்லை. அனைவரும் வியந்து நின்றனர். அது மட்டுமா அவர் தனது சன்னதிக்கு வந்ததும் தன்னை நேரிலே பார்க்கட்டும் என்பதற்காக தனது நந்தியை வழியை விட்டு விலகி இருக்குமாறு சிவன் ஆணையிட நந்தியும் விலகி நின்றது. பட்டீஸ்வரர் சன்னதிக்கு வந்த சம்மந்தர் ஈசனை நேரிலே கண்டார் , ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால்தான் இந்த ஆலயத்தில் மட்டும் சிவனுடைய சன்னதிலும் சரி, அதன் நுழை வாயிலிலும் சரி சிவலிங்கத்தை நந்தி மறைத்தபடி நிற்காமல் ஒரு பக்கமாக அமர்ந்து உள்ளது.
இந்த ஆலயத்தில்தான் ஞானவாபியில் குளித்து விட்டு தமது பூர்வ ஜென்ம தோஷத்தை நாய் உருவில் இருந்த ஒரு முனிவர் விலக்கிக் கொண்டு அங்கேயே மீண்டும் மனித உருவை அடைந்தாராம்.
பட்டீஸ்வரர் இந்த ஆலயத்தில் தனது மனைவியான பார்வதியை ஞானாம்பிகை என்ற உருவில் இருக்க வைத்து பக்தர்களை ரட்சித்து வருகிறார். பட்டீஸ்வரரையும் இங்குள்ள ஞானாம்பிகையை வணங்குவத்தின் மூலம் அனைவருடைய பூர்வ ஜென்ம பாவங்கள் மெல்ல மெல்ல மறையுமாம். எத்தனை முறை அவரை அங்கு வந்து பூஜித்து வணங்குவோமோ அத்தனை பாவங்கள் விலகும்.

Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...