Friday, July 7, 2017

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) யாருக்கு என்ன நன்மை ?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) யாருக்கு என்ன நன்மை ?
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர் பான மசோதா கடந்த டிசம்பர் 19-ம் தேதி அன்று மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் இந்த மசோதாவை
வரும் மார்ச் 2016-க்குள் நிறைவே ற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா எப்படிப்பட்டது, இம்மசோதாவைக்கொண்டு வரு வதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், இதனால் தொழில் துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன லாபம் கிடை க்கும், இந்தியாவின் ஜிடிபியில் இந்த மசோதா என்னெ ன்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்த கேள்விக ளுக்கான பதிலைப் பார்ப்போம்.

ஜிஎஸ்டி என்றால்..?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப் பு என்பது புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் சிக்கலானது. தற்போது ஒரு பொருளையோ அல்லது சேவையையோ தயாரித்து விற்கும்போது, அதற்கு கலால் வரி, சேவை வரி, ஒரு மாநிலத்திலிரு ந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டுசெல்ல நு ழைவு வரி, மாநில அரசுக்கு கட்ட வேண் டிய வாட் வரி என பல வரிக ளைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரே பொருளுக்கு பல இடங்களில் பலவகையான வரிகளைக் கட்டுவது சிரமம் தரும் விஷயமாகவே இ ருந்துவருகிறது. இப்படி பல இட ங்களில் வரிகட்டுவதைவிட, இந் தஅனைத்து வரிகளையும் ஒன்று சேர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரி யாக மத்திய மற்றும் மாநில அர சுகளுக்கு செலுத்துவதுதான் ஜி எஸ்டி.

யாருக்கு என்ன நன்மை?

1. மத்திய/மாநில அரசு:
 
மத்திய அரசுக்கு உற்பத்தியாளரி டம் இருந்து மட்டும் வந்த வரி என் பது தற்போது உற்பத்தியாளர் துவங்கி டீலர், மொத்த விற்பனை யாளர், அப்பொருளை கடையில் விற்கும் சிறு கடைக் காரர் வரை அனைவரிடமிருந்தும் வரி கிடைக்கும். இதனால் மத்திய அரசின் வரு வாய் அதிகரிக்கும். ஒரு சில து றைகள்தவிர அனைத்துத் துறை களுக்கும் இது பொருந்தும் என் பதால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு அதிகளவில் இருக்கும்.

மாநில அரசுகளைப் பொறுத்தமட்டில், இதுவரை சரக் குகளுக்கான வரியை மட்டுமே வருமானமாக கொண் டிருந்தன. ஜிஎஸ்டி மூலம் சரக்கு மற்றும் சேவை இரண்டுக்குமே மாநில அரசுக்கு வரிமூலம் வரு வாய் கிடைக்கும். இதில் சிலர், மாநில அரசுக்கு வருவாய் இழ ப்பு ஏற்படும் என்கின்றனர். அது தவறான கருத்து. தவிர, ஆல்க ஹால் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு இன்னமும் மாநில அரசிடம் தான் உள்ளது. அதனால் மாநில அரசுக்கு   எஸ்ஜி எஸ் டி ( மாநில சரக்கு மற்றும் சேவை வரி)மூலம் வருவாய் அதிகரிக்கும்.

2. தொழிற்துறை:

தொழில்துறையினர் நீண்டகாலமா கவே இதனை அறிமுகப்படுத்த வே ண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தொழில் துறையினரைப் பொறுத்தமட்டில், இந்த வரி விதிப்பு என்பது அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக் கூடியதாகவே இ ருக்கும். நிறைய வரிகளுக்காக தனித்தனியே அதிகதொகை யை வரியாகச் செலுத்த வேண் டிய சூழலில் இருந்து ஒரே வரி யாகச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளதை நிச்சயம் வரவேற்பார்கள்.

இதனை ஒருங்கிணைப்பதி ல் குழப்பங்கள் இருந்தாலும் , அதனை சரியாக ஒருங்கி ணைத்து வரி விதிப்பை அறி முகம் செய்யும்போது அவர்க ளது உற்பத்தித் துவங்கி அனைத்து நிலைகளிலும் செலவுகள்குறையும். செலவு கள் குறையும்போது அந்தப் பணம் திரும்பவும் தொழி லில் முதலீடாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதால், அவ ர்களது உற்பத்தித்திறன் அதிகரிக்கு ம். அப்போது உற்பத்தி அதிகரித்து பொருட்களை அதிக அளவில் விற் பனை செய்யும் சூழல் உருவாகும்.

3. பொதுமக்கள்:

இந்த வரிவிதிப்பின்மூலம் நிறுவன ங்களின் செலவு குறைவதால், அவர்கள் குறைந்த விலையில்தான் பொருட்களை விற்பார்கள். அதற்கான வரியும் குறைவாகவே இருக்கும். என வே, பொதுமக்களும் குறைந்த விலையில் அந்தப் பொருளை வாங்க முடியும். இதனால் பொ ருட்களை வாங் குபவரது எண்ணிக்கை அதிகமாகும்.

4.ஜிடிபி:
 
இந்தஜிஎஸ்டிமூலம் பெரும்பா லானோரை வரிகட்ட வைக்க முடியும். வரிஏய்ப்பு செய்வது குறையும். வரி மூலம்வரும் வ ருவாய் கணிசமான அளவு உயரும். இதனை அறிமுக ம் செய்தால், ஜிடிபியில் 2 % வளர்ச்சி  இருக்கும் என்று கூறுகின்றனர். அந்தளவுக்கு வளர்ச்சி அடையும் என்று கூறா விட்டாலும் தற்போது உள்ளதை விட நல்ல வளர்ச்சி இருக்கும் என்று கூற லாம்.

தற்போதுள்ள நிலவரப்படி, மத்திய, மாநில ஜிஎஸ்டி சேர்த்து 27 சதவிகிதமாக இத னை நிர்ணயிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் என்னைபொறுத்தவரை , மத்திய, மாநில ஜி எஸ்டியை சேர்த்து 12-14% வரி விதிப்பு என் பது சிறந்த விகிதமாக இருக்கும் . தற்போதுள்ள மத்திய அரசின் 12%, மாநில அர சின் 14.5% ஆகிவற்றை சேர்த்து 27 சத விகிதம் என்று வரி விதிக்காமல் மொ த்த வருவாயைப் பொறுத்து 12-14 சத விகிதமாக விதித்தாலே தற்போது உள் ளதைவிட அதிகவருவாயை அரசு ஈட் ட முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...