பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு முக்கியமான விதைதான் கருஞ்சீரக விதை. ஆயுர்வேதா, யுனானி மற்றும் இன்றைய நவீன மருந்துவகைகளிலும் கருஞ்சீரகம் கலவையாகப் பயன்படுத்தப்படுகின்றது. அவ்வளவு சிறப்பும் மறுத்துவக் குணமும் கொண்டதுதான் கருஞ்சீரகம். ஆங்கிளத்தில் Nigella sativa அல்லது Black seed என அழைக்கப்படும் கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பிய, தெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியாப் பகுதிகளாகும். இந்தியத் துணைக்கண்டத்தின் சில மாநிலங்களிலும் இவை காட்டுச் செடியாக வளர்கின்றன.
கருஞ்சீரகம் பழங்காலம் முதல் வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பழைமையான ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிளின் என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப் பற்றியும் அதன் மறுத்துவக் குணங்கள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார். சுமார்3,300 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த விதை எகிப்திய மக்களால் பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
கருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த்தாகும். அழகான தோற்றத்தில் சுமார் 20 முதல் 30 செ.மீ. உயரம்வரை வளரக்கூடியன. அதன் மல்ர்கள்கூட நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மலரின் இதழ்கள் ஐந்து முதல் பத்து வரை வெவ்வேறாகப் பிரிந்து காணப்படும். மலரிலிருந்து உருவாகும் காயின் மேற்பகுதி காய்ந்து பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பு நிறத்திலும் சற்று கடினமானதாக இருக்கும்.
கருஞ்சீரகத்தின் மிகப் பிரதான அம்ஷமே அதிலுள்ள மருத்துவக் குணம்தான். இது தொடர்பாக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபலமான ஹதீஸை இங்கு நோக்குவோம். ”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது”அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)
மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறுமளவு இதில் அவ்வளது மருத்துவக் குணங்களும் பயன்களும் இருக்கின்றன. இதனால்தான் இன்றும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக,நோய் நிவாரணியாக கருஞ்சீரகத்தை உபயோகப்படுத்துவார்கள். சவுதி போன்ற அரபு நாடுகளில் உணவுடன் கருஞ்சீரக விதை, கருஞசீரக எண்ணெய் என்பன சேர்த்துக்கொள்வது வழக்கமான ஒரு விடயம். அதனால்தான் அரபு மக்கள் இதனை “ஹப்பதுல் பரகாஹ் – அருள்பாளிக்கப்பட்ட விதை” என அழைக்கின்றனர்.
இவ்விதைகளின் மருத்துவக் குணங்கள் தொடர்பாக உயிரியல் மருத்துவ ரீதியாக (Biomedical) பல ஆய்வுகள் செய்யப்பட்டு அவை நிரூபிக்கப்பட்டு அதுபற்றிய450க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதையில் அடங்கியுள்ள தைமோ குவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. அத்தோடு உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்,கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் என பல சத்துக்களை இது கொண்டுள்ளது. மனித உடலில் தோன்றும் சுமார் 40 வகையான நோய்களுக்கு இதில் நிவாரணம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம்.
இன்று நாம் உட்கொள்ளும் உணவு, பாணங்களிலும் சுவாகிக்கும்போதும் பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாக மாறி பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன. கருஞ்சீரகத்தில் உள்ள MRSA (Methicillin resistant Staphylococcus aurous) எனப்படும் ஒருவகைப் பொருள் அவ்வாறான இரசாயனத் தாக்கங்களிலிருந்து மனிதனைக் குணப்படுகித்துகின்றன.
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு உதா¬ரணமாக சளி¬யுடன் சம்¬பந்¬தப்¬பட்ட சக¬ல¬வி¬த¬மான நோய்களுக்கும்) கருஞ்சீரகம் அருமருந்தாகக் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு பீனிசம் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் நோய்குணங்குறியான தும்மல், மூக்கில் இருந்து நீர் வடிதல், தலை வலி, முன் நெற்றிப்பகுதி பாரம் போன்ற நோய்களுக்கு கருஞ்சீரக எண்ணெய்யில் 3 அல்லது 5 துளி ஒரு மூக்குத் துவாரத்தினூடாக காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கைக்குச் செல்லும் போதும் இட்டு வருவதுடன் நெற்றிப்பகுதியிலும், உச்சந் தலையிலும் கருஞ்சீரக எண்ணெயினைத் தொடர்ந்து இட்டு அல்லது தேய்த்து வந்தால் அல்லாஹ்வின் நாட்டத்துடன் 2-3 கிழமையில் சலியுடன் தொடர்பான சகல நோய்களும் குணமடைய வாய்ப்புண்டு.
இதோடு தொடர்பான பின்வரும் சப்வத்தை படித்துப் பாருங்கள். காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதி-ருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமை‘த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், “சாம் என்றால் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “மரணம்” என்று பதிலளித்தார்கள். (புகாரி – 5687)
இதுவல்லாத இன்னும் பல்வேறு நோய்களுக்கு நிவாரணமாக கருஞ்சீரகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக Greenmedinfoஎன்ற இணையத்தளத்தில் உள்ள சில தகவல்களை இங்கே தொகுத்துத் தமிழில் தருகின்றேன்.
• கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
• சலியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை,மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.
• கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்க் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
• கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.
• 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
• கருஞ்சீரகத்தைக் காடி (vinegar) வினாகிரியுடன் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலி நின்றுபோகும்.
• கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
• வெள்ளைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் கலந்து சாப்பிட்டால் உடலிலிருந்து நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
• கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
• கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
• நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
• தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.
• பாலூட்டும் தாய்மார் கருஞ்சீரகம் உண்பதால் பால் சுரப்பைக் கூட்டும்.
• சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
• கருஞ்சீரகத்தை நீருடன் அரைத்து நல்லெண்ணையில் கலந்து சிரங்கு, சொறி, தேமல் உள்ள இடங்களில் பூசி வர குணம் தெரியும்.
• கருஞ்சீரகத் தூள், கொத்தமல்லித் தூள் இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட்டால் அல்லது கருங்சீரகத் துளை தயிரில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி குறையும்.
• கருஞ்சீரகத்தை தேன் பானியில் ஊரப்போட்டு அதிகாலை வெறும் வயிற்றுடன் சாப்பிட்டால் ஞாபக சக்தி கூடும்.
• கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.
• சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம் (pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.
• தலை முடி கொட்டுதல், இளவயதில் தலை முடி நரைத்தல் உள்ளவர்கள் கருஞ்சீரக எண்ணெய்யை நன்கு தேய்த்துவருவதால் இதனைத் தடுக்கமுடியும்.
”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்ற நபியவர்களது பொன்மொழி இன்று மருத்துவர்களால் கருஞ்சீரகம் தொடர்பாக கண்டறியப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு 1400 வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டதாகும். ஒரு வார்த்தையில் நபியரவர்கள் கூறிய விடயத்தில் எத்துனை எத்துனை மருந்துகள் இருக்கின்றன என்று பாருங்கள். மேலே உதாரணத்திற்காக நான் தொகுத்துத் தந்தவை சொற்பமே! இதுவல்லாத இன்னும் பல நோய்களுக்கும் கருஞ்சீரகத்தில் நிவாரணி இருக்கின்றது.
No comments:
Post a Comment