Sunday, July 9, 2017

சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மாசாணி அம்மன்.

அம்மன்கள் அனைவரும், நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் அருள் பாலிப்பர். ஆனால் மிக வித்தியாசமான வடிவில் சயன கோலத்தில் 15 அடி உயரத்தில் அருள் புரிகிறாள். மாசாணி அம்மன் என்ற பெயரில் அற்புத அன்னையாய் ஆனைமலையில் மல்லாந்து படுத்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள ஆனைமலையில் உப்பாற்றங்கரையில் கோவில் கொண்டுள்ளாள் மாசாணி அம்மன்.
நான்கு கரத்துடன், கரங்களில் திரிசூலம், முரசு, அறவம் மற்றும் மண்டையோடு தாங்கி சயன கோலத்தில் படுத்திருக்கிறாள். வேண்டுவோர்க்கு வேண்டிய அருளும், தீய சக்திகள் மற்றும் தீயவர்களிடம் இருந்து காக்கும் நீதி தேவதையாகவும் அருள்புரிகிறாள். பக்தர்கள் வேண்டுதலை ஒரு துண்டு சீட்டில் எழுதி மாசாணி அம்மன் பாதத்தில் சமர்ப்பித்தால் அவை நிறைவேறி விடுகிறது.
மேலும் இங்குள்ள நீதிக்கல் எனும் சக்தியின் சொரூபத்தில் மிளகாய் அரைத்து பூசி வேண்டி கொண்டால் உடனே அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறாள் மாசாணி அம்மன்.
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...