Sunday, July 9, 2017

#ஏழை பீடா கடைக்காரருக்கு தலைவரின் சாமார்த்திய உதவி!#

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன் என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .
வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்
‪#‎தலைவர்‬ நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...