டீவி நிகழ்ச்சிகள் , அலுவலகங்கள் , நிர்வாகம் , அறிவியல் , பள்ளி கூடங்கள் , வங்கிகள் என்று எல்லா தளத்திலும் தமிழ் நாட்டில் மெல்ல ஒரு முட்டாள் தனமான விவாதம் மேல் எழுகிறது.
அது IT நிறுவனங்களில் கூட விட்டுவிடவில்லை போல்.
"இது தமிழ் நாடு - இங்கே எவன் எவனோ வந்து நிர்வாகம் பண்றான். அவனுக்கு நமஸ்காரம் போட்டு வேலை செய்ய வேண்டிய அவல நிலை தமிழ் மக்களுக்கு. எல்லாம் நம்ம நேரம்".
இப்படி பிரிவினை பேச்சுகள் அதிகம் எழுவது அப்பட்டமாக தெரிகிறது. இது நல்ல ஆரோக்கியமான விசயம் அல்ல.
எல்லா நிறுவனங்களிலும் போட்டி , நிர்வாக ரீதியாக politics இருக்கும் அதற்கு வசதியாக தமிழை இழுத்து கொள்வது வெக்ககேடு.
திறமைக்கு மதிப்பு கொடுக்காமல் , மொழிக்கு முக்கியதுவம் கொடுக்கும் சிலர் இருக்கலாம். ஆனால் அது எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. நிச்சயம் சில இடங்களில் நடக்கலாம். அது போல் தமிழர்களும் சில மாநிலங்களில் நடப்பர். அது exceptional.
தெலுங்கு , கன்னடம் , மலையாளம், செளராஸ்ரா பேசும் மக்கள் இங்கே இருப்பது போல் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்களும் உண்டு.
உடனே அங்கே எல்லாம் நடக்கவே இல்ல தமிழ் நாட்டில் மட்டும் நடப்பது போல் பேசுவது வீண் விவாதம். அறிவான வாதமும் அல்ல.
மொழி வெறி மெல்ல அரசியல் விசமாக மாறுகிறது.
IT நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு நண்பரை சந்தித்தேன் அவர் கூறினார்
"எனக்கு கிடைக்கவேண்டிய promotion ஒரு தெலுங்கு பேசுபவனுக்கு போய்விட்டது. தமிழ் நாட்டில் தமிழனுக்கு இதான் மரியாதை. நாடு ரெம்ப மோசமாகிவிட்டது".
விசயம் என்னவென்றால் :
அந்த நண்பர் தன் குழந்தையை CBSE பள்ளியில் சேர்த்து விட. அவர் ஒரு 7வருடம் பெங்களூரில் வேலை செய்ய.. 2வருடம் வெளிநாடுகள் சென்றுவர அப்போ இல்லாத தமிழ் வெறி இப்போ எப்படி எட்டி பார்க்கிறது.. அவருக்கு மாதம் 1.5லட்சம் சம்பள வேலை கொடுத்த நிறுவனம் அடிபடையில் ஐரோப்பிய நிறுவனம்.. அவன் பார்க்காத மொழி பிரிவினை இவருக்கு எதற்கு?
எல்லாம் அரசியல்.. சுயநலத்துடன் கூடிய புத்திசாலிதனமான அரசியல்.
தமிழகத்தை தாய்வீடாக கருதும் எவருக்கும் தமிழகத்தில் முழு தகுதியுண்டு நிர்வாகம் செய்ய. அது அரசியல் நிர்வாகம் என்றாலும் சரி அரிசி ஆலை நிர்வாகம் என்றாலும் சரி.
"அப்படி மொழி பிரிவினை விதைப்பீர் என்றால் நான் தென் தமிழகத்தை சார்ந்தவன். தமிழகம் என்று கூறி கொண்டு சென்னை, கோயம்பத்தூர் , ஈரோடு , சேலம் தானே எல்லா நிறுவனமும் போகிறது. எத்தனை நிறுவனம் மதுரை , திருநெல்வேலி , சிவகங்கை , ராமநாத புரம் வந்தது? என் மக்கள் வேலை தேடி எதற்கு சென்னை கோயம்பத்தூர் போகவேண்டும்? என்று என்னாலும் பிரிவினை பேச முடியும். விட்டு கொடுத்து புரிந்து நடப்பது உங்களுக்கு இல்லை என்றால் என்னிடமும் எதிர் பார்க்காதீர்.".
பிரிவினை பேசினால் தமிழகம் கொங்கு , வட , தென் தமிழகமாக உடைவதை எவனாலும் தடுக்க முடியாது. ஏன் என்றால் அது தானே வரலாறு.
நான் எல்லாம் தமிழன் இல்லை , ஏதோ இவனுக மட்டும் தான் தமிழன் என்று சிலர் திரிவது நல்லதுக்கு அல்ல. என்னுடனே படித்து விளையாண்டு வளர்ந்த என் நண்பர்களை திடீர் என்று தெலுங்கர் என்று பட்டம் சூட்டி தனிமைபடுத்துவதை என்னால் சும்மா விட்டுவிட முடியாது.
குட்டி சீமான்கள் கொஞ்சம் திருந்துங்கள். உங்கள் சுய தேவைக்கு மொழி பிரிவினையை விதைக்காதீர். வேலை தேடி உலகம் முழுவதும் பயணிக்கும் பரந்து விரிந்த படித்த உலகத்தில் இருந்து கொண்டு - தமிழர் என்று வட்டம் போட்டு அரசியல் செய்யாதீர்.
No comments:
Post a Comment