Wednesday, July 12, 2017

ஏழைகளின் முதல்வர், அனைத்தையும் உணர்ந்தவர்.

1977 ஆம் ஆண்டு வரை காவலர்கள் அலுவல் தொடர்பாக பேருந்தில் பயணம் செய்தால் டிக்கெட் வாங்கவேண்டும். பிறகு அந்த தொகையை திரும்ப பெற டிக்கட் மற்றும் விவரங்களுடன் காவல்துறைக்கு சமர்ப்பித்தால் பின்னர் சிலவாரம் கழித்து அந்த செலவுத் தொகை திரும்ப காவலர்களுக்கு கிடைக்கும். அப்போது
( 1977 வ‌ரை) காவலர்களுக்கு கிடைத்த குறைந்த சம்பளத்தில் முன்னே பயணத்திற்கு செலவு செய்வதற்கு சிரமப்பட்டனர். 
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த சிலநாட்களில் காவலர்கள் மக்கள் பணிக்குதானே உள்ளனர். எனவே பணிதொடர்பாக தமிழகம் முழுமைக்கும் பேருந்தில் எங்கு சென்றாலும் டிக்கெட்டே வாங்க வேண்டாம்! இலவசமாகவே பயணம் செய்யலாமென காவல்துறை ஆணைய‌ரிடம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். அது அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. தலைவர் தெரிவித்த இந்த சலுகைக்கு தனியாக அரசாணை இன்றுவ‌ரை இல்லை! ஆனால் செயல்படுத்த பட்டு வருகிறது. இது எப்படி இருக்கு? .

Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...