ஒரு சிறிய கதை மூலம் தெரிந்து கொள்வோம்.!
நமது சொந்த ஊரில் ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் இந்த கரையில் இருந்து எதிர் முனையில் உள்ள கரைக்கு ஆற்றில் நடந்து கடந்து கொண்டு இருக்கிறோம். அதே வேளையில் நம்மை ஒருவர் பின் தொடர்ந்து வருகிறார்.
நமது சொந்த ஊரில் ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் இந்த கரையில் இருந்து எதிர் முனையில் உள்ள கரைக்கு ஆற்றில் நடந்து கடந்து கொண்டு இருக்கிறோம். அதே வேளையில் நம்மை ஒருவர் பின் தொடர்ந்து வருகிறார்.
ஆரம்பத்தில் இடுப்பு வரை சூழ்ந்து இருந்த நீர் ஆற்றின் மைய பகுதிக்கு சென்றவுடன் மார்பு வரை நீர் வந்து விடுகிறது. அதுவரை பொறுமையாக நம்மை பின் தொடர்ந்து வந்த நபர், ஐயா நான் இந்த ஊருக்கு புதியவன், எனக்கு எதிர்முனைக்கு செல்ல வேண்டும், ஆனால் இந்த ஆற்றினை பற்றி ஏதும் தெரியாது, ஆரம்பத்தில் இடுப்பு வரை இருந்த நீரின் அளவு தற்சமயம் மார்பு வரை வந்து விட்டது. எனக்கு நீச்சலும் தெரியாது ஆகவே எனக்கு பயமாக உள்ளது என்று கூறுகிறார்.
அதற்கு நாம், இதுவரை மார்பு வரை உள்ள நீர் இன்னும் உள்ளே சென்றால் கழுத்து வரை வரும்,அவ்வளவுதான். கழுத்துக்கு மேலே வராது. எனவே பயபடாமல் என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூறுகிறோம். இப்பொழுது அந்த நபர் தைரியமாக நம்முடன் சேர்ந்து கரையை கடக்கிறார்.
ஆற்றில் மார்பு வரை நீர் சூழ்ந்த போது பயந்த நபருக்கு கழுத்து வரை நீர் சூழ்ந்த போது பயம் வரவில்லை தைரியமாக நம்மை பின் தொடர்ந்து கரையை அடைந்தார்.
இதே போல்தான் மிகவும் கஷ்டத்தில் வரும் வாடிக்கையாளரிடம் இந்த கஷ்டமோ அல்லது இதற்கு கொஞ்சம் மேலாகவோ ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் இருக்கும், அதன் பின் ஒரு பிரகாசமான எதிர்காலம் உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறது என்ற தன்நம்பிக்கையை கொடுத்து வருகிறோம்.
நன்றி !
No comments:
Post a Comment