Sunday, August 6, 2017

களம் கண்ட காமராசர்..

1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான்போர் மூண்டது. நேருவின் மறைவிற்குப்பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும்,எனவே படையெடுப்பின் மூலம் மிரட்டிப்பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின்இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான்கருதினார்.ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரஸ்தலைவர் காமராசர் ஆகியோர்இணைந்து காட்டிய மன உறுதி உலகைவியக்கவைத்தது.பகைவரைத் திகைக்க வைத்தது.பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில்அமைந்திருந்த போர் முனைக்குச்சென்று வீரர்களைச்சந்தித்து உற்சாகமூட்ட காமராசர்விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்தபிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், குடியரசுத் தலைவர்இராதா கிருஷ்ணனும் திடுக்கிட்டு அவரைத்தடுக்க முயன்றனர்.ஆனால் கர்மவீரரோ பிடிவாதமாக இருந்தார்.வேறு வழியில்லாமல் பிரதமர் அவர்விருப்பத்திற்கு இணங்கினாலும், காமராசரைப்பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளைச்செய்யுமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார்.களத்திற்குக் காமராசர் செல்லுவது மிகஇரகசியமாக வைக்கப்பட்டது. பஞ்சாபில்எல்லைப் பகுதியில் இரு தரப்புப் படைகளும்எதிரெதிரே அணிவகுத்து நின்றன.எல்லைப் பகுதியில் காவல் காக்கும்நமது வீரர்களைச் சந்திக்க வேண்டும் எனகாமராசர்கூறியபோது படைத்தளபதி திடுக்கிட்டு விட்டார்.ஐயா! வெள்ளை வேட்டி - சட்டையுடன்தாங்கள் போர் முனைக்குச்செல்வது அபாயத்தை வரவழைப்பதாகும்.எதிரிகளின் துப்பாக்கிக்குச் சுலபமானகுறியாகும். எனவே அதைத்தவிர்ப்பதுநல்லது எனப் பணிவுடன் எடுத்துக்கூறினார்.அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்டஅவர் அப்படியானால் கரும்பச்சை நிறக்கால்சட்டையும், மேல் சட்டையும்அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார்.என்னை வேஷம் போடச் சொல்லுகிறீர்களா?அது என்னால் முடியாது என மறுத்தார்.வேறு வழியின்றிக் காமராசர் சென்றவண்டியில் படைத் தளபதியும்ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர்.காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காதவடநாட்டு வீரர்கள் "காலா காந்தி!, காலா காந்தி!" (கறுப்பு காந்தி)எனக் கூவி மகிழ்ந்தனர்.
அவரைச்சூழ்ந்து ஆரவாரித்தனர்.இந்தியாவின் வரலாற்றில் அரசுப்பதவி எதிலும்இல்லாத ஒரு தலைவர் தமது உயிரைத்துச்சமாக மதித்துப் போர்க்களம்சென்று திரும்பியது இதுதான் முதலும்கடைசியுமாகும்.அவருக்கு முன்போ அவருக்குப்பின்போ யாரும்இவ்வாறு துணிந்து சென்றதில்லை...நாடு பார்த்தது உண்டா??? இந்தநாடு பார்த்தது உண்டா???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...