கஞ்சனூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்றப்பெயரில் சிவபெருமானே சுக்கிரனாக இருக்க,நவகிரஹங்களில் சுக்கிரனுக்கான வழிபாட்டுத்தலமாக உள்ளது. சின்ன கோவில் தான்.
ஸ்ரீ சிவசூரியனார் என்று சூரியனார் கோவிலில் எதிரில் குரு வணங்கி நிற்க ஆஜானுபாகுவாக சாயா தேவி,உஷா தேவியுடன் சூரியன் சன்னதி இருக்கிறது.
அவரை வணங்கும் முன் குறைக்கேட்ட கணபதி என்ற பிள்ளையார் சன்னதியை வணங்கிப்பின் சூரியனாரை தரிசித்துப்பின் ஒவ்வொரு திசையையும்ப்பார்த்தப்படி நிற்கும் நவகிரஹ குட்டிக்குட்டி சன்னதிகளை தரிசிப்பதும் சிறப்பு இங்கே.
பின்னர் மீண்டும் கணபதியைப்பார்த்து வந்தக்காரணத்தை சொல்லி நமஸ்கரித்து கோவிலை விட்டு கிளம்பவேண்டுமாம்.
திரு நாகேஸ்வரம் ராகுஸ்தலம்
நுழையும் போது கணபதிரகசியம் என்ற பெயரில் ஓரு வெற்று அறை உள்ளது.. அது பல சுவையான தகவல்களைக்கொண்டுள்ளது.
நாக நாத ஸ்வாமி அம்பாளுடன் மூலக்கடவுளாக வீற்றிருக்க
ராகு பகவான் நாகவள்ளி,நாககன்னி என்ற தேவியருடன் தனி சன்னதிக்கொண்டிருக்க அவரைப்பார்க்கவும் தனித்தனிக்கவுண்டர்கள் அட்வான்ஸ்டாக உள்ளன.
இங்கு முன்புறம் சுயம்பு திருமேனியாக கிரிகுஜாம்பாள் சன்னதி உள்ளது. அங்கு சரஸ்வதி,லஷ்மி யின் திருவுருக்களும் தரிசிக்க பிந்துவில் அம்பாள் மூவரது சொரூபமாக நிற்கிறாள்.
காண்பதற்கரிய காட்சி..அவசியம் காண வேண்டிய ஸ்தலம்.
அடுத்தது திரு நள்ளாறு...
தர்பாரண்யேஸ்வரர் மூல மூர்த்தி, சனி பகவனுக்கு பிறையில் அமைக்கப்பட்ட திருமேனி !
சுத்தமாக கவனிப்படக்கோவில் நன்றாக உள்ளது..
சுத்தமாக கவனிப்படக்கோவில் நன்றாக உள்ளது..
No comments:
Post a Comment