Tuesday, August 8, 2017

எவர் உள்ளம் உயர்ந்த உள்ளம்..?

இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997 )
வீடு தேடிப் போனார் ரஜினி ..!
.
“ நல்லா இருக்கீங்களா ஸார்.?”
“நல்லா இருக்கேன்... சொல்லுங்க ரஜினி..”
“அடுத்து ஒரு படம் பண்றேன் ..”
“ ரொம்ப சந்தோஷம்..!”
“ ‘அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்..”
“ஓ.. நல்லா இருக்கு .. ”
“இந்தப் படத்தின் மூலமா நம்ம சினிமா இண்டஸ்ட்ரில கஷ்டப்படற சிலருக்கு உதவலாம்னு இருக்கேன்..”
“ரொம்ப சந்தோஷம்..”
“ ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன் ...
அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம்...ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்..”
.
ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.
.
ரஜினி தொடர்ந்தார் :
“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு.....”
.
இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி...எனக்கு இந்த உதவி தேவையில்லை .. நான் அவ்வளவு கஷ்டப்படலை ... என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க..”
.
ஸ்ரீதரிடமிருந்து இந்தப் பதிலை ,கொஞ்சம் கூட ரஜினி எதிர்பார்க்கவில்லை..!
.
மௌனமாக இருந்த ரஜினி எழுந்தார் : “அப்போ புறப்படறேன் ஸார்..”
.
“ஒரு நிமிஷம் ரஜினி..”
.
ஸ்ரீதரை திரும்பிப் பார்த்தார் ரஜினி...!
.
ஸ்ரீதர் சொன்னார் : “உண்மையாகவே நீங்க எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சா ... இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுங்க ..அதுக்கு சம்பளம் கொடுங்க ..அது முடியலேன்னா பரவாயில்லை ரஜினி..!
உங்க அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுங்க.. அதுக்கு சம்பளம் கொடுங்க... அதை விட்டுட்டு , சும்மா உங்ககிட்ட இருந்து பணம் வாங்கிக் கொள்ள நான் தயார் இல்லை.. ஸாரி ! ”
.
பிரமித்துப் போனார் ரஜினி ..!
.
# இப்போது நம் நெஞ்சில் எழும் கேள்வி ...!
.
ரஜினி – ஸ்ரீதர் ... இருவரில் எவர் உள்ளம் உயர்ந்த உள்ளம்..?
உடல் நிலை சரியில்லாத மனிதருக்கு , அவர் கேட்காமலே ஓடோடிப் போய் உதவி செய்யத் துடித்த ரஜினியின் உள்ளம் உயர்ந்ததா...?
.
ஊதியம்தான் வாங்குவேனே தவிர ,
உதவி வாங்க மாட்டேன் என்று ரஜினியிடமே ஓங்கி உரைத்த ஸ்ரீதரின் உள்ளம் உயர்ந்ததா..?
.
இதற்கு உங்கள் பதில் எதுவாக இருந்தபோதிலும் ..
இந்த உயர்ந்த உள்ளங்களை ...
.
# நெஞ்சம் மறப்பதில்லை..!
Image may contain: 2 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...