ஜிஎஸ்டி பதிவு செய்து கொண்ட நிறுவனங்கள், மாதம் மூன்று முறையும், ஆண்டு இறுதியில் ஒரு முறையும்என மொத்தம் 37 முறை கணக்குகளை (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய வேண்டும்.
இது தவிர, அவர்கள் பொருள் விற்பனையாகும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டிபதிவினை செய்து கொள்ள வேண்டும்.
சிறு, குறு தொழில் களுக்கு இதுவே பெரிய மிகுந்த செலவு பிடிக்கும், நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தும் அம்சமாகும்.
நம் நாட்டில் வரிகள் மிகவும் அதிகம்என பொதுவாகப் பேசப்படுவது உண்டு.ஆனால், அது உண்மைஅல்ல.
இப்படிக் கூறுவது, மக்களின் பொதுவான புரிதலுக்குசற்று முரண்பட்டிருக்கும் என்பது உண்மையே.
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) மதிப்பில், வரிகளின் அளவு 16.6 சதவீதம் மட்டுமே.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இது34 சதவீதம், அமெரிக்கா மூ 27 சதவீதம், பிரிட்டன் மூ 39சதவீதம், ஜெர்மனி மூ 41 சதவீதம், பிரான்ஸ் மூ 45 சதவீதம். பிரிக்ஸ் நாடுகளில்கூட, ரஷ்யா மூ 20 சதவீதம், சீனா மூ 21 சதவீதம், தென் ஆப்பிரிக்கா மூ 27 சதவீதம்.
நம்மைப் போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இது சராசரியாக 21 சதவீதம்.
இந்த நாடுகளில் எல்லாம் பொதுவாக, கார்ப்பரேட் மற்றும் செல்வந்தர்கள் செலுத்தும் நேரடி வரிகளின் பங்கு, மொத்த வரி வருமானத்தில் மூன்றில் இரண்டு; சாமானிய மக்கள் செலுத்தும் மறைமுக வரிகள் மூன்றில் ஒன்று மட்டுமே.
ஆனால், நம் நாட்டில் இது தலைகீழாக இருக்கிறது. இந்திய ஜி.டி.பி மதிப்பில், 16.6 சதவீத அளவிலான வரிகளில், நேரடி வரிகளின் பங்கு வெறும்5.47 சதவீதம் மட்டுமே.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.5 லட்சம் கோடி வரை விதித்தவரிகளை வசூலிக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு மத்திய பட்ஜெட் வழங்கும் சலுகைகள் தனி.
ஆனால், மறைமுக வரிகளின் பங்கு 11.13 சதவீதம். அதாவது, இந்திய நாட்டின் மொத்த வரி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கினை சாமானிய மக்கள் செலுத்துகின்றனர் என்பதே அதன்பொருள்.
இன்று விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரிகள், அச்சுமையினை அதிகரிக்க இருக்கின்றன.
பாரபட்ச அணுகுமுறை!
ஒரு புறத்தில் நேரடி வரி, மறைமுக வரி என்றவர்க்கப் பாரபட்சம் எனில், மறு புறத்தில், மறைமுகவரிகளுக்குள்ளேயும், மக்கள் பயன் படுத்தும் பண்டங்கள் மற்றும் சேவைகளில் வசதி படைத்தவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் இடையிலானபாரபட்சங்களை ஜி.எஸ்.டி வரி விகிதங்களில் காண முடிகிறது.
இதுவரை வரி விதிப்பிற்குட்படாத, சாமானிய மக்கள் பயன்படுத்தும் 509 பொருட்கள் இன்று ஜி.எஸ்.டி வரி வலையில் சிக்கியுள்ளன.
இதனைப் புரிந்து கொண்டால் தான், பொதுவாக 25 முதல் 30 சதவீதம் வரை விலைகள் குறையும்என்று கூறிய பிரதமர் மோடியின் நகைச்சுவை உணர்வினை ரசிக்க முடியும்.
புரிதலுக்காக ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுக்கள் இதோ!
கடலை மிட்டாயினையும் - பீட்சாவினையும் சமப்படுத்தி விதித்திருக்கும் 5 சதவீதம் வரியிலிருந்தே, மோடியின் நகைச்சுவையினை ரசிக்க முடியும். (‘காக்கா முட்டை’ திரைப்படம் பார்த்தவர்கள் இதனைக் கூடுதலாக ரசிப்பார்கள்.) முதலில் கடலைமிட்டாய்க்கு 18 சதவீதம் எனக் கூறப்பட்டது. பின்னர்அது சரி செய்யப்பட்டது.
‘‘தங்க பிஸ்கட்டிற்கு 3 சதவீதம், திங்க பிஸ்கட்டிற்கு 18 சதவீதம்‘‘ போன்ற வாட்ஸ் ஆப் பதிவுகள் இந்தப் பின்னணியில் வந்தவையே.
நேற்று வரை வரி விதிக்கப்படாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்லி காகிதங்கள் உள்ளிட்டவை இன்று வரி விதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. இதன்மூலம், 2016 ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் இயற்றிய மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், ஐ.நா. அமைப்பின் வழிகாட்டல்கள் அனைத்தும் குப்பைக்கூடைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளின் அகில இந்திய அமைப்பின் எதிர்ப்பு, கேரளாமற்றும் திரிபுரா மாநில அரசுகளின் தலையீட்டிற்குப் பின்னர் தான் 18 சதவீதமாக இருந்த வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மருந்துத்துறையில் மனித ரத்தமும், கருத்தடைச்சாதனங்களும் தவிர மற்ற அனைத்தும் வரிக்கு உட்பட்டவை.
முன்பு விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்த 348 மருந்துகளுக்கும் இப்போது வரி உண்டு.
பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் கூடஇன்று ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.
விவசாயம் வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வு,விவசாய நெருக்கடியின் ஒரு முக்கியக் காரணியாகமாறி விட்ட நிலையில், அவற்றின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பது இந்திய விவசாயிகளின் இயல்பான கோரிக்கை. ஆனால், ஜி.எஸ்.டிஅதனை புறந்தள்ளி விட்டது.
பூச்சிக் கொல்லி மருந்துகள் மீது 18 சதவீதம் வரி.உரத்தின் மீது விதிக்கப்பட்ட 12 சதவீத வரி கடுமையான எதிர்ப்பின் பின்னணியில் 5 சதவீதம் ஆகக் குறைக்கப்பட்டது.
வேளாண் உற்பத்திச் சாதனங்களுக்கு 12 சதவீதம் வரி; எனினும், அதனது உதிரி பாகங்களின் வரி 28 சதவீதம் என்பது கேலிக்கூத்து. அதாவது, டிராக்டர் மீதான வரி 12 சதவீதம், ஆனால், அதைப்பராமரிக்கும் வேலையில் விவசாயிக்கு தேவைப்படும் டயர், எந்திர உதிரிப்பாகங்கள் மீது 28 சதவீதம்.
குளிர்பதனக் கிடங்குகளுக்கு 18 சதவீதம் வரி.வேளாண் உற்பத்திப் பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஆனால், அவை உறைகளில் அடைக்கப்பட்ட வர்த்தக முத்திரை கொண்ட பண்டங்கள் (பிராண்டட்) எனில், அவற்றிற்கு 5 சதவீதம் வரி.
கடைகளில் உணவு தானியங்களை உதிரியாக விற்கக்கூடாது என உணவுப் பாதுகாப்புச் சட்டம் கூறும்நிலையில், உறைகளில் அடைக்கப்பட்ட அனைத்தும் பிராண்டட் பண்டங்களாகக் கருதப்பட்டு, 5 சதவீதம் வரிக்கு ஆளாகின்றன.
சிறு தொழில்கள் நேற்று வரை ரூ.1.5 கோடி வரை வரவு - கொண்ட சிறு தொழில்களுக்கு மத்திய எக்சைஸ் வரி கிடையாது. ஆனால், இப்போது ரூ.20 லட்சம் அளவிலான தொழில்களேவரி வலைக்குள் வந்து விடும்.
கிரைண்டருக்கு நேற்று வரை 4 சதவீதம் வரி. இப்போது 28 சதவீதம். பம்புசெட்டிற்கு நேற்று 4 சதவீதம், இன்று 18சதவீதம் வரி.
இதுவரை துணிக்கு வரி இல்லை. இப்போது துணிக்கு மட்டுமல்லாது, சாயம் ஏற்றுவது, காஜா தைப்பது என ஒவ்வொரு கட்டமாக வரி உண்டு.
சுமார் 5 கோடி என்ற எண்ணிக்கையில் இருக்கும்சிறு, குறு தொழில்களின் உற்பத்திப் பண்டங்களுக்கு இதுவரை மத்திய எக்சைஸ் வரி இல்லாததனால், விலை குறைவாக இருந்தன. அந்தக் குறைவான விலைகள் மூலமே, பெரிய உற்பத்தி நிறுவனங்களின் போட்டியினை அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இப்போது அத்தகைய தொழில்கள் எல்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
ஜி.எஸ்.டி பதிவு செய்து கொண்ட நிறுவனங்கள், மாதம் மூன்று முறையும், ஆண்டு இறுதியில் ஒரு முறையும் என மொத்தம் 37 முறைகணக்குகளை (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய வேண்டும்.
இது தவிர, அவர்கள் பொருள் விற்பனையாகும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜி.எஸ்.டி பதிவினை செய்து கொள்ள வேண்டும்.
சிறு, குறு தொழில்களுக்கு இதுவே பெரிய மிகுந்த செலவு பிடிக்கும், நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தும் அம்சமாகும்.
ரூ.75 லட்சம் வரையிலான அளவில் உள்ள தொழில்கள் கூட்டமைவுத் திட்டத்திற்குள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், அவர்கள் ஒன்றிரண்டு சதவீதஅளவில் வரி கட்டினால் போதும் எனவும், ஆண்டொன்றிற்கு நான்கு தடவை கணக்கு தாக்கல் செய்தால்போதும் எனவும் சலுகை போன்றதொரு தோற்றம்உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதற்கு உள்ளே நுழைந்து பார்த்தால் இந்தச் சலுகையின் லட்சணம் புரிந்து விடும்.
இந்த நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு பொருட்களை விற்க முடியாது. இது இவர்களதுவாடிக்கையாளர் தளத்தை பெரிதும் பாதிக்கும்அம்சமாகும்.
மேலும், ஜி.எஸ்.டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கிடையில் பரிவர்த்தனைகள் எளிதானவை. விற்பவர் வரி கட்ட வேண்டும். வாங்குபவர் கட்டப்பட்ட அந்த வரியினைக் கழித்துக் கொண்டு அதை வாங்கிவிட முடியும். ஆனால், ஜி.எஸ்.டி பதிவில்லாத நிறுவனங்களிடமிருந்து வாங்குவதானால் வரியினைவாங்குபவர் கட்ட வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு தொழிலாளர் நலச் சட்டங்கள், சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் பலவும் கைவிடப்பட்டு வரும் காலம் இது.
சுமார் ஒன்றரைக் கோடி தொழிலாளர்களின், குறிப்பாக சுரங்கங்கள், உப்பளங்கள், சுண்ணாம்புக்கல் சுரங்கம் போன்ற தொழில்களில் உள்ளவர்களின் சமூக நலச் சட்டங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டு, அரசின் வேறு பல நலத் திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்தப்பின்னணியில், சமூகப் பாதுகாப்பு கேள்விக்கு உரியதாகி இருக்கிறது.
வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டும் அல்லாது, வளர்ந்து வரும் நாடுகளின் அரசுகள் சில கூட, சமூகப் பாதுகாப்பினை தங்களது கடமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கணிசமான அளவில் அது தனி நபர்களின் பொறுப்பாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,
.
ஆயுள் காப்பீடு, மருத்துவ சேவை உள்ளிட்ட பல சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தங்களது சொந்தச் செலவில் பெறுகின்ற மக்கள் மீது, அதாவது ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீது 18 சதவீதம் சேவை வரி என்பது அபராதம் இல்லாமல் வேறென்ன? உலகின் பலநாடுகளில் இல்லாத வரி இது.
.
ஆயுள் காப்பீடு, மருத்துவ சேவை உள்ளிட்ட பல சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தங்களது சொந்தச் செலவில் பெறுகின்ற மக்கள் மீது, அதாவது ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீது 18 சதவீதம் சேவை வரி என்பது அபராதம் இல்லாமல் வேறென்ன? உலகின் பலநாடுகளில் இல்லாத வரி இது.
இந்த நாட்டின் நலத்திட்டங்களுக்கு கோடி கோடியாகக் கொட்டிக்கொடுக்கும் எல்.ஐ.சி பாலிசிதாரர்களின் சேமிப்பின்மீது சேவை வரி என்பது, சேமிக்கும் மக்களை தண்டிப்பது தானே?
அனைத்திலும் சூது…
வரிகளைக் குறைப்பதும், சீராக்குவதுமே ஜி.எஸ்.டியின் நோக்கம் எனக் கூறும் மோடி அரசு,பெட்ரோல், டீசல் மீதான வரிகளை ஜி.எஸ்.டியின்வரம்பிற்கு வெளியே வைத்து விட்டது.
ஜி.எஸ்.டியில் தற்போதைய உச்ச வரம்பு 28 சதவீதம். மத்திய, மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல்மீதான வரிகள் முறையே 57 சதவீதம், 55 சதவீதம் வசூலாகும் நிலையில், இந்த உச்சவரம்பு தடையாக நிற்கும் என்பதால், இது திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை வரிகளின் அளவு மத்திய - மாநில அரசுகளின் அரசியல் கொள்கைகளின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் அதிகாரங்களுக்கு உட்பட்ட அம்சங்களாகவே இருந்து வந்திருக்கின்றன.
இப்போது அது முழுமையும் ஜிஎஸ்டிகவுன்சிலுக்கு கைமாறியிருக்கிறது.
வாக்கு மதிப்புக்கள், மத்திய அரசுக்கு 33 சதவீதம், மாநில அரசுகளுக்கு 66 சதவீதம் என்று இருப்பினும், மத்தியிலும் மாநிலங்களிலும் பெரும்பான்மை கொண்டகட்சிகளின் உரிமையாக அது மாறி விடுகிறது.
இது மாநிலங்களில் ஆளும் பிற கட்சிகளின் அதிகாரங்களைப் பறிப்பதாக உள்ளது.ஜிஎஸ்டி கட்டமைப்பில் (ஜிஎஸ்டி நெட் ஒர்க்) மத்திய அரசின் பங்கு 24.5 சதவீதம், மாநில அரசுகளின் பங்கு 24.5 சதவீதம். ஆக மொத்தம் 49 சதவீதம்.
மீதியுள்ள பெரும்பான்மையான 51 சதவீதம் தனியார் கைகளில்.
இந்தக் கட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் எதனையும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது.
இது, இந்தியத் தலைமை தணிக்கையாளரின் ஆய்விற்கும் உட்பட்டது அல்ல.
இந்திய மக்களின் நுகர்வுப் போக்குகள் குறித்த அனைத்துத் தரவுகளும் இன்று தனியார் கைகளில் எனும் போது,சர்வதேச வர்த்தகத்தில் எந்தெந்த நாடுகள் இவற்றைதங்களுக்கு ஆதரவாக எவ்வாறெல்லாம் பயன்படுத்தும் எனச் சொல்ல முடியாது.
இந்தப் பாதுகாப்பின்மை ஆளும் கட்சிக்குள்ளே கூட சில விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
மொத்தத்தில் மோடி அரசின் இந்த ஜி.எஸ்.டி சூதுவாதுகள் மக்களை, விவசாயத்தினை, சிறு தொழில்களை, மாநில அரசுகளை, இந்திய நாட்டின் வர்த்தகத் தரவுகளின் பாதுகாப்பினை என பல முனைகளில் தாக்குகின்றன.
எனவே, வரும்காலங்களில் இவற்றை எதிர்த்த போராட்டங்கள் தவிர்க்க இயலாதவை.
No comments:
Post a Comment