Friday, August 11, 2017

வல் வில் ஓரி என்பவர் யார்..இவருக்கும் கொல்லி மலைக்கும் என்ன சம்பந்தம் ?

கடையெழு வள்ளல்கள் பாரி,எழினி,காரி,பேகன்,நள்ளி,மலையன்,ஓரி இதில் கடைசியாக சொன்ன ஓரி,ஒரேவில்லில் யானை,ஒரு புலி,காட்டுபன்றி போன்ற ஏழு மிருகங்கள் கொல்லும் பர்பெக்ட் வில் வீரர் வல்வில் ஓரி எனவும், இவர் வீரம் பற்றி நம் கல்கியும் பொன்னியின் செல்வனில் சொல்கிறார்.
கிபி 200 ல் சோழ அரசின் குறு நில மன்னனாக இருந்து கொல்லிமலை சார்ந்த இடங்களை ஆண்டு வந்தவர் தான் இந்த ஓரி. இவர் பெயர்க்காரணம் பார்த்தோம்..ஏன் இவர் வள்ளல்கள் லிஸ்ட்ல்.. இவர் காரி என்ற இன்னொரு வள்ளலுடன் (காரி பகைவர்களை தன் வாள் வீச்சில் பொழுதுபோக்காக வீழ்த்துவதால் எப்போதும் சென்னிறமாக பளீச்சிடும் வாளைக்கொண்டவர்,ஆனால்.. உதவி என கேட்டுவந்தவர்களுக்கு வெண்ணிற குதிரைகளை தானமாக வழங்கியவராம்..அதனால்..கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவர்)
போரிட்டு வெற்றிப்பெற்று அதன் மூலம் கிடைத்த நிலப்பகுதியை பாணர்கள்/ கூத்தர்களுக்கு தானமாக வழங்கியவர்..வள்ளல் எனப்பாடப்பட்டிருக்கிறார்.
குறுந்தொகை 100, கபிலர், குறிஞ்சி – தலைவன் சொன்னது :
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.
குறுந்தொகையிலும் ஓரி பற்றிக்குறிப்பு உள்ளது.
இவரது பேவரைட் ஸ்பாட் நம் கொல்லிமலை தான்.
இங்குதான் வேட்டையில் சிறந்தவராக அறியபட்ட இவர் வேட்டுவகவுண்டர்களின் தலைவனாக மன்னனாக அறியப்படுகிறார்.
அவருக்குதான் திருவிழா எடுக்கப்படுகிறது ஆடி 18 அன்று !
மேலே அறப்பள்ளீஸ்வரர் ஆலயம்..மதில்களில் பதினெண் சித்தர்கள் அமர்ந்திருக்க பக்தியுடன் வேண்டிக்கொள்பவர்களுக்கு ஜோதி வடிவில் காட்சிதருகிறார்களாம்.
தினமும் காலை பூஜையில் ஜோதிவடிவில் கலந்துக்கொள்கிறார்களாம்.
சுந்தர சோழனது காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்ததாக தகவல் பலகை ஆச்சர்யத்தை விதைக்க,பல சிறப்புகள் வாய்ந்தக்கோவிலில் நந்திஸ்வரர் மூலம் சிவபெருமானே சித்தர்களுக்கு யோகம் ஞானம்,மருத்துவம் பயிற்றுவித்ததாகவும் சொல்கிறார்கள்.
சித்தர்கள் நடமாடும் இடம் என்பதால் எச்சில் உமிழாதீர்கள்,மது அருந்த வேண்டாம்,அசைவம் வேண்டாமே என்ற போர்டுகளுடன் பக்கவாட்டில் ராட்டினங்கள் சுற்ற தலையில் ஒளிரும் கொம்புகளுடன்,பத்தை மாங்காய் முதற்கொண்டு பக்கா டூரிஸ்ட் ஸ்பாட்டாக காட்சியளித்தது.
அந்த இறைத்தன்மையை விட மக்களின் அடர்த்தி,திருவிழாக்கோலமே அதிக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...