நியூ இங்கிலாந்தில் உள்ள குன்றுகளின் மீது 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் உலகத்தின் முடிவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருந்தார்கள். வில்லியம் மில்லர் என்ற பாதிரியார் செய்த வேலை தான் அது. அதாவது உலகம் அழியப் போவதாக மில்லர் பிரச்சாரம் செய்து வைத்து இருந்ததை நம்பி நடந்து கேலிக் கூத்து சம்பவத்தின் தொகுப்பு தான் இது.
அப்படிக் குன்றின் மீது பாதிரியார் பேச்சை கேட்டு உலகம் அழியப் போவதாக நினைத்துக் கூடி நின்ற அப்பாவிகள் அனைவரும் இனி தங்களுக்கு என்ன இருக்கிறது? என்ற விரக்தியில் தங்களது சொத்துக்களை வேறு அவசர அவசரமாக விற்று விட்டனர். இன்னும் சிலர் 3.4.1843 ஆம் தேதிக்கு முன்னமே பாதிரியின் பேச்சை நம்பி தற்கொலை செய்து கொண்டனர் (பின்னர் சொர்க்கத்தில் இடம் இல்லாமல் போய்விட்டால் அதற்காகத் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்). ஆனால், பயந்தபடி எதுவுமே நடக்கவில்லை. அதன் பிறகு ஒரு லட்சமாக இருந்த மில்லரின் ஆதரவாளர்கள் குறைந்து போனார்கள். பலர் இந்தச் சம்பவத்துக்குப் பின் அவர் சொன்ன எதையுமே நம்ப வில்லை. அந்தப் பாதிரியார் கடுமையாக பிற்காலத்தில் விமர்சிக்கப்பட்டார்.
மொத்தத்தில் இறை நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு மக்கள் இதனை இன்றும் கூட புரிந்த பாடில்லை. மூட நம்பிக்கைகள் ஒரு போதும் இறை நம்பிக்கை ஆகாது.
No comments:
Post a Comment