Tuesday, August 8, 2017

ஜனநாயகப்படுகொலையா?

குஜராத்தில் மேலவையின் மூன்று இடங்களுக்கு மூன்று பாரதீய ஜனதா பார்ட்டி கேண்டிடேட்களும்
ஒரு காங்கிரஸ் கேண்டிடேட்டும் போட்டியாளர்கள் !இதில் கட்சிகளின் வோட்டு வலிமையைப்பொருத்து ஹெவி வெயிட் அமீத்ஷா-வும் மத்திய அமைச்சர் ஸ்மிதிரானியும் காங்கிரஸ் உறுப்பினர் அஹமதுபட்டேலும் எளிதில் வெற்றி பெருவார்கள்!ஆனால் காங்கிரஸின் பல்வந்த்சிங் ராஜ்புட் கடைசி நேரத்தில்
BJP-க்கு கட்சிமாறி அகமது பட்டேலுக்கு சேரவேண்டிய வாக்கை BJP உதவியுடன் பணம் ஆள்கடத்தல் செய்து பிரித்தன்மூலம் தனது வெற்றியை சாதித்து மேலவையில் BJP தனது எண்ணிக்கையை பெருக்க வழி செய்துள்ளார்!
மேலவையை பொருத்தவரை ஒருகாலத்தில் திறமையான பாராளுமன்ற உருப்பினர்களின் சேவை தேசத்திற்குத் தேவையென்ற அடிப்படையில் யாரிடம் உபரி ஓட்டு உள்ளதோ அதை விட்டுக்கொடுத்து அவரை தேர்ந்தெடுப்பது வழக்கம்! ஆனால் 52 வருட பாராளுமன்ற வரலாற்றில் அகமதுபட்டேல் தனது கட்சியின் சொந்த வாக்கில் சுலபமாக வெற்றி பெரும் வாய்ப்பிருந்தும் அவர் தோற்கடிக்கப்பட்டு பணம் ஆள்கடத்தல் மூலம் வேறோர் ராஜ்யசபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை!
மோடியின் தலைமையில் நடப்பது ஆரோக்கியமான ஜனநாயகமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...