#காட்சி_1:
காலையில் ஆட்டோவில் ஏறும்போது கவனித்தேன்.. அந்த ஆட்டோ இளைஞர், தன் ஆட்டோவின் முன் பக்கத்தில் ஒரு கொத்து வேப்பிலையைச் சொருகி வைத்திருந்தார்.
‘‘என்ன தம்பி, வேப்பிலையெல்லாம் வச்சிருக்கீங்க?’’ என்று விசாரித்ததும், ‘‘ஆடி மாசம் இல்லையா? அதான், அம்மனைக் கும்பிட்டு தினமும் கொஞ்சம் வேப்பிலையை என் ஆட்டோவிலும் சொருகி வச்சுக்கிறேன்!’’ என்றார் அவர்.
#காட்சி_2:
வீட்டில் பணிபுரியும் பெண் அன்று பணிக்கு வரவில்லை. போன் செய்து விசாரித்தபோது, ‘‘ஐயோ அம்மா, குழந்தைக்கு டெங்கு ஜுரம்னு சொல்றாங்கம்மா. டெஸ்ட் பண்ணதுல இப்பத்தான் ரிசல்ட் வந்தது. ஏழு வருஷம் குழந்தை இல்லாம இருந்து ஆசை ஆசையா பெத்தெடுத்த குழந்தை. எனக்கு பயமா இருக்கும்மா!’’ என்று அழுத பெண், ‘‘இங்கிலீஷூ டாக்டர்கிட்டதான் போனோம். ஆனா, அவரு ஊசியெல்லாம் போடாம, வேப்பிலையை கொதிக்க வச்சுத் தரச் சொல்றாரும்மா!’’ என்றார்.
#காட்சி_3:
சென்ற ஞாயிறு அன்று கூட்டமாக சிலர் வந்து நன்கொடை கேட்டார்கள். ‘‘நம்ம தெரு முனையில் இருக்கிற அம்மன் கோயில்ல ஆடி கூழ் ஊத்தப் போறோம்!’’ என்றார்கள். இன்னும் சிலர், அக்கம் பக்கத்து வேப்பிலை மரங்களில் இருந்து வேப்பிலை கொத்துக்களை பறித்து, கோயிலைச் சுற்றியும் தெருவைச் சுற்றியும் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்கள் .

சமீபத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த மூன்று காட்சிகள் ஒரேயொரு மிகப் பெரிய உண்மையை சொல்லிவிட்டுச் சென்றன. அது, ஆடி மாதத்தில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் பற்றியது!
இன்று தினசரி பேப்பர்கள் எல்லாம்,
டெங்கு காய்ச்சல் எப்படிப் பரவி வருகிறது,
அவற்றில் எத்தனை பேர் இறந்தார்கள் என அலறிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் டெங்கு காய்ச்சலுக்கு, அந்தப் பணிப்பெண்ணுக்கு ஆங்கில மருத்துவர் சொன்னது மாதிரி, வேறெந்த தீர்வும் இல்லை. நிலவேம்பு தவிர!
’ஆடி’ என்பது, சீதோஷ்ண ரீதியில் மிக முக்கியமான மாறுதல் ஏற்படும் காலம். வெயில் முடிந்து, ஈரப்பதம் ஆரம்பிக்கும் காலம். சூரியனின் சுழற்சியில் ஏற்படும் மாறுதலைக் கணித்து (ஆடி முதல் அடுத்த ஆறு மாதங்கள் தட்சிணாயணம்)
‘இந்த மாதம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருக்க வேண்டிய மாதம்!’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் நமக்கு முன் இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்!
வெறும் எச்சரிக்கையோடு நிறுத்தி விட்டு விலகி விடுவது முன்னோரின் இயல்பு அல்லவே..
அதனால், அவர்கள் ஸ்டைலில், இந்த மாதம் குறித்து நமக்கு பல்வேறு விதமாக எச்சரித்து, ‘இதை இதையெல்லாம் செய்ய வேண்டும்!’ என்று
நம்மை இந்த நேரத்தின்
நோயெதிர்ப்பு சக்தி மிகுந்த வாழ்க்கைக்குப் பழக்கியும் வைத்திருக்கிறார்கள்.
(ஆடியில் செய்யும் இந்த விஷயங்களை நாம் அறிவியல்பூர்வமாகப் பார்க்க வேண்டுமே தவிர, மதம் சார்ந்து பார்க்கத் தேவையில்லை! ஆரோக்கியமாக வாழச் சொல்லும் ஒரு வாழ்க்கை முறையில் மதம் எங்கிருந்து வருகிறது? இது மதங்கள் பிறப்பதற்கு முன்னாலான நமது வாழ்க்கை முறை என்று அறிக!)
வெயிலின் தாக்கம் முடிந்து ஈரப்பதம் காற்றில் அதிகமாக உருவாகும் இந்த சீசனில், எக்கச்சக்கமான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. அவை, மக்களின் நோயெதிர்ப்பு சக்தியைக் குலைத்து, சளி, காய்ச்சல், டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்கள் என்று விதவிதமாக ஏற்படுத்துகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், காற்றில் இருக்கும் பாக்டீரியாக்களில் இருந்தும் நமக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்! இதற்குத்தான் நாம் வசிக்கும் ஏரியாவின் காற்றில் பாக்டீரியாவின் தாக்கத்தைத் தடுக்க, ஏரியா முழுவதும் தோரணக் கயிறுகளில் கொத்துக் கொத்தாக வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் வந்தது!
பலர் வீடுகளிலும் நுழைவாயிலில் வேப்பிலையைக் கொத்தாக தொங்க வைத்திருப்பார்கள்.
ஒருவேளை, தப்பிப் பிழைத்து சில பாக்டீரியக்கள் வீட்டை முற்றுகையிட்டால், வாசலிலேயே அவை தடுக்கப்படட்டும் என்ற முன்னெச்சரிக்கைதான்!
அதேபோல் ‘ஆடிக்கூழ்’ உடல் உறுப்புகளுக்கு அதிக வேலைப்பளு தராமல், அதேசமயம் தேவையான பலத்தைத் தர உதவுகிறது!
வயிறு பாகங்களுக்கு குறைவான வேலைப்பளுவைத் தரும் (அதே சமயம் உடலுக்கும் அதிக பலம் தரும்) கூழை அந்த மாசத்தில் அதிகம் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இவையெல்லாவற்றையும் மீறி, பாக்டீரியாக்களால் அல்லது கொசுக்களால் விஷ ஜுரங்கள் பரவவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கும்கூட வேப்பிலையே கடைசியில் மருந்தாகிறது! நிலவேம்பைத்தான் கொதிக்க வைத்து மருந்தாகக் கொடுத்து, பல உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. உயிரைக் காப்பாற்றுவதாலேயே வேப்பிலையை (வேம்பை) ‘தெய்வம்’ என்று அழைத்து வணங்குகிறோம்.

No comments:
Post a Comment