இரட்டை இலை சின்னத்துக்காக குறுக்கு வழியில் உதவி செய்ய தேர்தல் கமிஷனில் ஒரு அதிகாரிக்கு 150 கோடி வரை பேரம் பேசி அதற்கு அட்வான்ஸ் தொகையாக சில கோடிகளை அனுப்பிய TTV தினகரன்.....
தனக்கு சமையல் செயது தர ஆட்களை நியமித்து , அதை கண்டுகொள்ளாமல் இருக்க சிறை அதிகாரிகளுக்கே இரண்டு கோடி லஞ்சம் கொடுத்த சசிகலா...
இவர்களும், இவர்கள் குடும்பவும் புரட்சித்தலைவி யை எப்படி விசுவாசமாக, உண்மையாக வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் ....? ஒரே ஆச்சர்யம் ...!
ஏற்கனவே, சசிகலா குடும்பத்தை 2011 ல் விலக்கி வைத்திருந்தார் புரட்சி தலைவி.
நடராஜனை பல வருடங்களாக எங்கேயும் அனுமதிக்கவேயில்லை..
நடராஜனை பல வருடங்களாக எங்கேயும் அனுமதிக்கவேயில்லை..
TTV தினகரனை கட்சியின் எல்லா பொறுப்புகளிருந்தும் ஒதுக்கி வைத்து தன கடைசி மூச்சு வரை கட்சியிலோ, வீட்டிலோ அனுமதிக்கவேயில்லை..
தன்னுடைய வளர்ப்பு மகனாக சிறிது காலம் அனுமதித்திருந்த சுதாகரனை புரட்சித் தலைவி ஒரு காலக் கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற்றினார், இனி சுதாகரன் தன வளர்ப்பு மகனில்லை என்று அறிவித்தார். சுதாகரன் வேறு ஒரு வழக்கத்தில் சிறையில் அடைக்கப் பட்ட போது கூட சுதாகரனை மீட்டெடுக்க அவர் எந்த வகையிலும் முன்வரவில்லை.
சசிகலா விடமிருந்து மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்டு, இனி சசிகலாவின் கணவர் நடராசன், தினகரன், திவாகரன், சுதாகரன், இளவரசி உள்பட எந்த உறவினரையும் சந்திக்கமாட்டேன் என்று உத்திரவாதம் எழுதி பெற்றுக் கொண்ட பிறகே ஜெயலலிதா சசிகலாவை தன வீட்டினுள் அனுமதித்தார்.
அப்படி இருக்கும் போது அப்பல்லோவில் அந்த தலைவிக்கு இவர்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து விசுவாசமாக வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்......உலக மகா ஆச்சர்யமல்லவா...இது..
பிரதமர், கவர்னர் உட்பட யாரையும் அனுமதிக்காமல், எந்த வித காமிராவும் இல்லாமல் செய்த்துவிட்டு, மிகவும் உண்மையாக, முழு முயற்சி செயது, நேர்மையாக வைத்தியம் செயதிருப்பார்கள் என்று நம்புவோம்....
துரதிர்ஷ்டமாக முதலமைச்சர் இறந்ததும் மக்களுக்கும், அரசுக்கும் அதைப் பற்றி அறிவிக்காமல் , அதற்கு முன்பாக மந்திரிகளையும் , MLA க்களையம் அப்போலோ மருத்துவ மனையிலேயே ரகசியக் கூட்டம் நடத்தி அன்று இரவே பதவி ஏற்று மந்திரி சபை அமைக்கவைத்தார் சசிகலா...அதை அவரே வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார். அடடா என்ன கடமை உணர்ச்சி....!
தன கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் சதிகாரர்கள் என்று தன வீட்டை விட்டு வெளியேற்றிய ஒரு தோழிக்காக, அதுவும் அவர் நினைவில்லாமல் மருத்துவமனையில் கிடந்த போது ....இவ்வளவு நேர்மையாக, விசுவாசமாக மருத்துவம் பார்த்தவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...
No comments:
Post a Comment