ஒரே ஒரு சம்பவத்தை சொல்கிறேன் அப்ப புரியும் ஏன் மர்மம் விலகாது என்று
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு சென்னையை மூழ்கடிக்கப்பட்ட போது மியாட் மருத்துவ மனையின் முதல் தளம் வரை மூழ்கியது மின் சப்ளை செய்யும் டிரான்ஸ்ஃபார்மர் மூழ்கியது ... மொட்டை மாடியில் வைக்கபட வேண்டிய ஜென்செட் விதிமுறைகள் மீறி கீழ் தளத்தில் வைத்திருந்ததால் அதுவும் பனால் ஆகி முற்றிலும் மின் சப்ளை காலி ....
அதன் காரணமாக ஐசியூவில் இருந்த 12 நோயாளிகள் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தனர் ... மரணம் அடைந்த நோயாளிகளை ஒரேயொரு பிஆர்ஓ மொத்தமாக ஒரு வண்டியில் அள்ளி போட்டுக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து அனாதை பிணங்களை போல போட்டுட்டு போயிட்டாரு .... உறவினர்களுக்கு கூட சரியான தகவல்கள் சொல்லப்படாமல் .....
பிரச்சினை பெரியதானவுடன் உடனே களம்மிறங்கியது மியாட் மருத்துவ மனையின் ஓனரோ அல்லது மருத்துவர்களோ அல்ல .... நேர்மைக்கு பிறந்த நேர்மையையே மூச்சாக கொண்ட கடந்த 12 வருடங்களாக சுகாதார துறையின் செயலரும், முன்னாள் ஜனாதிபதி வெங்கட் ராமனின் பேரனுமாகிய இராதாகிருஷ்ணன் .... ஒரு எப் ஐ ஆர் இல்லை , போஸ்ட்மார்ட்டம் இல்லை , இழப்பீடு இல்லை , விசாரணை இல்லை .. இல்லை இல்லை என்று எதுவும் இல்லாமல் ஆக்கினார் .... அந்த அளவுக்கு நேர்மையையே சோத்துல பிசைந்து சாப்பிடும் நேர்மையாளர் .....
இந்த இராதாகிருஷ்ணன் தான் இப்போது வரை சுகாதார துறையின் செயலர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையின் பிஆர்ஓ வேலையைத் தான் பார்த்தாரே தவிர ... அரசு சார்பில் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் மூடிக்கிட்டு வேடிக்கை மட்டும் பார்த்தவர் .... .
ஒரு நாள் ஆங்கில நாளிதழில் சசிகலா ஜெயலலிதா வழக்கை பயன்படுத்தி ஜெயலலிதா ஜெயிலுக்கு போன பிறகு ஆட்சியை கைப்பற்ற பார்க்கிறார் அது இது என்று ஒரு கட்டுரை வருகிறது .... அதை தொடர்ந்து இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் ஒன்று அதையே ஒப்பிக்கிறது .. பிறகு தான் சசிகலா வெளியேற்றம் ... இடையில் மோடி அனுப்பிய டாக்டர்கள் நர்ஸ் கட்டுப்பாட்டில் ஜெ வருகிறார் பிறகு தான் ஜெயலலிதா உடல்நிலை மோசமாகிறது மீண்டும் சசிகலா உள்ளே வருகிறார் ... சில நாட்களுக்கு பிறகு பொண்ராதா கிருஷ்ணன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று பேசுகிறார் அவர் சொன்ன படியே நடந்து முடிந்தது ..... ஜெயலலிதா இறப்பு நடந்த போது வெங்காய நாயுடு இங்கேயே டேரா போடுகிறார் ஓபிஎஸ் வருகிறார் மீதி எல்லாம் நாம் பார்த்த நாடகங்கள் தான் .....
தினகரன் தைரியமாக சசிகலாவே அப்பல்லோவில பார்க்க முடியாமல் போனது என்று போட்டுடைக்கவும் , சிபிஐ என்ன இன்டர்போல் விசாரணைக்கும் தயார் என்றவுடன் பிஜேபிக்கு திடீர் ஷாக் அடிக்கிறது அந்த வார்த்தை வந்த பிறகு தான் எல்லோரும் கவர்னர் மீது சந்தேகத்தை கிளப்புகிறார்கள் ..... என்னடா வம்பு என்று இன்று அவரைக் காப்பாற்ற புது புரோக்கர் ஐ நியமிக்கிரார்கள்
சிபிஐ டெல்லி போலீஸ் ஆக்டில் வரும் ஒரு அமைப்பு தான் தன்னாட்சி அமைப்பு என்று பிலிம் காட்டினாலும் கூட டெல்லவாலாக்களின் அல்சேஷன் பிராணி தான் அது ..... மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு வின் ஒரே மகன் கொலையையே பத்து வருடமாக கண்டுபிடிக்க முடியாத பல் போன கிழட்டு நாய்கள் , இதுவா விசாரணை நடத்தி உண்மையை கொண்டுவரும் ?
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஏன் நர்ஸை டாக்டரை அனுப்புனீர்கள் இப்போது அவர்கள் எங்கே ?
பிரதமராக இருந்தும் ஒரு முதல்வர் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் இருந்தும் ஏன் வந்து பார்க்கவில்லை??
ஜெ கட்டை விரலை காட்டி னாரா ? ஜெ பன்னீர் செல்வத்திடம் இலாக்கா மாற்றி கொடுக்க சொன்னாரா ? பொருப்பு முதல்வராக பன்னீரை நியமிக்க சொன்னாரா ? எப்ப? எப்படி? சொன்னார் என்று ஆளுநர் வித்யாசாகர் இடம் விசாரிக்குமா ?
பொண்ராதாவை எதை வைத்து அப்படி மாற்றங்கள் வரும் னு சொன்னீங்க அதன் மர்மம் என்ன ?
எய்ம்ஸ் டாக்டர்கள் என்ன செய்தார்கள் ? அவர்கள் கண்டறிந்தது என்ன ?
சிபிஐ போயஸ் கார்டனில் ஆரம்பித்து அப்பல்லோ வந்து அங்கிருந்து போய் பன்னீர்செல்வம் எடுபிடி மங்குனி களை விசாரித்து அங்கிருந்து குஜராத் போய் நர்ஸ் டாக்டர் ஐ விசாரித்து மகாராஷ்டிரா போய் ஆளுநரை விசாரித்து அங்கிருந்து டெல்லி போய் மோடி வெங்காய நாயுடுவை விசாரித்து கடைசியாக பொன்ராதா .... பிறகு மொத்தமாக பைலை அலசி துவைத்து இஸ்த்திரி போட்டு ரிப்போர்ட் கொடுப்பதற்க்குள்ள ....அடப் போங்கப்பா ... நமக்கு பேரப்பசங்களே வந்துடுவாங்க
அதுவரை சசிகலா வை இருக்க விடமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ..... மொத்த பழியையும் போட்டு சசிகலாவை எளிமினேட் செய்துவிட்டால்.? பிரச்சனையின் கோணம் யாருக்குமே புரியாம போய்விடும் .. ... சசிகலாவிறக்கு அப்போல்லோவில் நடந்த அரசியல் எல்லாம் கண் முன்னே வந்து போகுமா இல்லியா அதனால்தான் பிடிமானம் கையில் இல்லாமல் பிஜேபியை எதிர்க்க முடியாமல் உள்ளுக்குள் குமுறிக்கோண்டு இருக்கிறார் ....
No comments:
Post a Comment