1976ல் 'அன்னக்கிளி' படம் பார்த்து இளையராஜா ரசிகனாகின்றேன்.
1980ல் 'மூடுபனி' 100வது படம் என்று அறிந்து பெருமை கொள்கிறேன்.
1985ல் 'உதய கீதம்' 300வது படம் என்றதும் மெய் சிலிரத்தப் போகிறேன் எண்ணிக்கையை நினைத்து.
1987ல் 'நாயகன்' என்றொரு படத்தை இசைக்காகவே நான்கு முறைப் பார்க்கிறேன்.
அது ராஜாசாரின் 400வது படம் என்பதறிந்ததும், எனக்குள் ஒரு ரசிகனாக கர்வம் வரக் காண்கின்றேன்.
'இனி இளையராஜா என்னும் இசைக்கலைஞனை அடிச்சிக்க ஆளேயில்லை' என்று.

1990ல் 'அஞ்சலி' வருகிறது.
500வது படம் என்கிறார்கள்.
வியந்துபோகிறேன் நான்.
உறுதியுடன் அன்றே ஒரு முடிவெடுத்துவிடுகிறேன்,
'இவ்வுலகில் உண்மையாகவே ஓர் இசைமேதை எனது இளையராஜாதான்' என்று.

1992ல் 'தேவர் மகன்' ரிலீஸ் ஆகிறது.
அது ராஜாசாருக்கு 600வது படமாகிறது.
சற்று யோசித்துப்பாருங்கள் ஒரு ரசிகனின் மனது எப்படி இருந்திருக்கும் என்று.
'போற்றிப் பாடடி பொண்ணே',
'இஞ்சி இடுப்பழகி',
வித்தியாசமானதொரு இசை.
எங்கள் இந்திய கலாச்சாரம் சற்றும் குறையாமல், மேற்கத்திய இசையை அங்கங்கே கலந்து உலகத்தரத்தில் ஓர் அற்புத இசை.
இசைக்காகவே ஓடுகின்றன படங்கள்.
நான் பூரித்துப் போகிறேன்.
நூறு நூறாகக் கடந்து வருகிறார் எங்கள் ராஜா சார்.
இவருக்கு நான் ரசிகன் என்ற கௌரவம் என்னில் மேலோங்குகிறது.

2000த்தில் 'ஹேராம்' வெளியாகிறது.
எப்போதும் போலவே இசையிலொரு புதுப் பரிமாணம்.
'இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே',
'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி'
'ராம் ராம் ஜெய் ஜெய் ராம் ராம்'
போன்ற பாடல்களில் கொட்டுகிறது பாருங்கள் அந்த க்ளாசிக்கல் இசை என்பார்களே, கர்னாடிக் க்ளாசிக்கல், வெஸ்டர்ன் க்ளாசிக்கல், ஹிந்துஸ்தானி க்ளாசிக்கல் என்று தனது இசையின் பரிமாணத்தை மட்டுமின்றி, தனது ரசிகர்களின் இசை ரசனையையும் சேர்த்து யாராலும் எட்டமுடியாத உச்சத்திற்குக் கொண்டுபோய் வைத்துவிடுகிறார்.
(தயவு செய்து மேற்சொன்ன இப்படத்தின் பாடல்களைக் கண்டிப்பாகக் கேளுங்கள்.)

அவற்றில் ஏகப்பட்ட ட்ரம்ஸ்களின் சத்தம் இருக்கிறது. அதோடு சேர்ந்துகொண்டு எல்லாவகைத் தோல்வாத்தியங்களும் ஒரேநேரத்தில்கூட ஒலிக்கும் இடங்கள் வருகின்றன.
ட்ரம்பெட்டுகள், ஷெனாய், க்ளாரினெட் இவைகள் எல்லாமே உச்சஸ்தாயியில் வாசிக்கப்பட்டுள்ளன பல இடங்களில் ஏன் பாடகர்களின் குரல்களும் ஹை பிட்ச்தான்.
இருந்தபோதும் காதுக்கு இனிமை சேர்க்கின்றன அப்பாடல்கள்.
கேட்பவருக்கு கெடுதல் ஏற்படுத்துகின்ற ஓசை அளவை எந்தப் பாடலும் தொடவில்லை.
அது உத்தரவாதம்.
அது எப்படி சாத்தியமாகிறது.
அதுதான் எங்கள் ராஜா சார்.
இசை உலக அதிசயம்.

இப்போது இவரது இசையில் நான் ஆயுள் கைதயாக சிறையிடப்படுகிறேன்.
2016ல் ஆயிரமாவது(1000) படம் 'தாரை தப்பட்டை' வெளிவருகின்ற நேரம்.
எனக்குள் நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.
'நான் ஓர் இசைஞானியின் வாழ்நாள் ரசிகன்.
என் உயிர் என்னில் இருக்கும்வரை இந்த ஆயிரம் படங்கள் போதும்.
கிட்டத்தட்ட ஆராயிரம் (6000) பாடல்கள் நம் வாழ்நாளை ஆனந்தமாய் கழிக்க இருக்கவே இருக்கின்றன',என்ற மன நிறைவு என்னில் தோன்றக் காண்கிறேன்.
வாழ்வின் பயனை அடைந்து விடலாம் என்ற திடமான நம்பிக்கை என்னுள் வளர்வதையும் காண்கிறேன்.

ஆக,
இப்போது அத்தகைய ஒரு வாழ்க்கையை என் பணிநிறைவுக்குப் பின் அனுபவத்துக்
கொண்டிருக்கிறேன், நான்.

இளைராஜாசாருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன் நான், இத்தகு வாழ்வை எனக்களித்ததற்கு.
இதுபோல் எத்தனை பேர்கள் எத்தனை கோடிகளில்.
நன்றியுடன்,
இளையராஜா பக்தன். 🙏.
இளையராஜா பக்தன். 🙏.
No comments:
Post a Comment