♥1 ) அவர்கள் முன்னால் போனை உபயோகப்படுத்தாதீர்கள். தூர வைத்து விடுங்கள்.
♥2) அவர்கள் சொல்வதை கவனியுங்கள்.
♥3) அவர்கள் கருத்தை சரியாக இருந்தால் ஆமோதியுங்கள்.
♥4) அவர்களுடன் அடிக்கடி உரையாடி மகிழுங்கள்,, பாராட்டுங்கள்.
♥5) நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கெட்ட விஷயங்களை தவிர்த்துவிடுங்கள்
♥6) அவர்கள் சொன்னகதையையோ, அனுபவங்களையோ மீண்டும்சொன்னால், முதலில் கேட்பது போல் பாவனை செய்யுங்கள்.
♥7) அவர்கள்பேசும் போது குறுக்கே பேசாதீர்கள்.
♥8) குழந்தைகளை அவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்துங்கள்.
♥9) அவர்களுடைய அறிவுரைக்கு முன்னுரிமை கொடுங்கள்.
♥10) அவர்கள் முன் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்.
♥11) நடக்கும் போது அவர்களுக்கு முன்னால் நீங்கள் செல்லாதீர்கள்.
♥12) அவர்கள் சாப்பிட்ட பிறகு நீங்கள் உணவருந்துங்கள். அல்லது அவர்களோடு சேர்ந்து உணவருந்துங்கள்
♥13) அவர்கள் முன்னால் கால் மேல் கால் போட்டு அமராதீர்கள்
♥14) அவர்களை யாராவது தவறாக பேசினால் நீங்களும் அப்படியே பேசாதீர்கள்
♥15) அவர்கள் முன்னால் விருப்பமில்லாமல் அமர்ந்திருப்பது போல் இருக்காதீர்கள்
♥16) அவர்களுடைய இயலாமையையோ, குறைகளையோ கண்டு சிரிக்காதீர்கள்.
♥17) அவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே தேவையானதை நீங்களே பார்த்து செய்து விடுங்கள்.
♥18) அவர்கள் விரும்பினால், செல்லமாக அவர்கள் பெயர் சொல்லி அழையுங்கள்.
♥19) அவர்கள்தான் உங்களுக்கு முக்கியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.
♥20) அவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
♥அவர்களை பொக்கிஷம் போல பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் மறைந்த பிறகு புலம்பி பிரயோசனமில்லை.
No comments:
Post a Comment