இசைக் குயில் என்று மொத்தத் தென்னிந்திய திரையுலகமும் கொண்டாடும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளபல்லபட்லா என்ற ஊரில், 1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு மகளாகபிறந்தவர்.
சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் இருந்ததால், நாதசுரமேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப்பயிற்சியைப் பெற்ற இவர் அகில இந்திய வானொலி 1956-ல் பாட்டுப் போட்டி ஒன்றை நடத்திய போது அதில் கலந்துகொண்டு, அப்போதைய ஜானாதிபதி டாக்டர்ராஜேந்திரபிரசாத்திடம் பரிசு பெற்றார்.
ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாகஇருந்த இவருக்கு தமிழில் முதன் முதலாக பின்னணிபாடக் கூடிய வாய்ப்பு , 'விதியின் விளையாட்டு' என்றபடத்தில் கிடைத்தது . டி.சலபதிராவ் இசையில் அவர் பாடியஅந்தப் பாடல் அடுத்த நாளே, கண்டசாலாவுடன் சேர்ந்துஒரு தெலுங்கு பாடலைப் பாடுவதற்கானக்கான வாய்ப்பைஇவ் இவருக்குப் பெற்று தந்தது. அறிமுகமான முதல்வருடத்திலேயே ஆறு மொழிகளில் 100 பாடல்களைப் பாடி புதிய சாதனையைப் புரிந்தார் இவர்
ஜானகியின் வாழ்க்கையில், பெரும் திருப்பத்தைஏற்படுத்திய படம் 'கொஞ்சும் சலங்கை.' எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் காரு குறிச்சி அருணாசலம் அவர்களுடைய நாதஸ்வர இசையோடு இணைந்து இந்தப்படத்திற்காக இவர் பாடிய , 'சிங்காரவேலனே தேவா...' என்ற பாடல் இன்றுவரை ரசிகர்கள் விரும்பிக் கேட்கின்ற பாடலாக இருந்து வருகிறது
இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்த அந்தப்பாடலைத் தொடர்ந்து ஜானகி அவர்களுக்கு பரவலாக வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் அவரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் இவர் பாடிய அன்னக்கிளி திரைப்படம்தான் அந்தப் படத்திற்காக இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்கள் என்றாலும் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று தொடங்கும் பாடல் இவருக்கு தனியானதொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.
அதைத்தொடர்ந்து இவர் பாடல் இடம் பெறாத படமேஇல்லை என்ற நிலை தமிழ்த் திரையுலகில் ஏற்பட்டது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழ்ப்படங்களில் எல்லா பிரபல கதாநாயகிகளுக்கும் பின்னணி பாடினர்
ஒரே நாளில் நாலைந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டன இவர்.
பின்னணிப் பாடுவதில் எண்ணிலடங்கா சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 1 7 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்களுக்கு மேல்பாடியிருக்கிறார் இவர் . இத்தனை மொழிகளில் பாடல்கள் பாடிய இந்த சாதனை திரையுலகில் இதுவரை எவரும் நிகழ்த்தாத சாதனை .
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத்தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ள இவர் மௌனப்போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயதுகிழவியின் குரலிலும் குரலை மாற்றி பாடக் கூடியஆச்சரியமான திறமையும் இவருக்கு உண்டு. சிறந்தபாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளஇவருக்கு பத்மபூஷன் விருதிணை அளித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது. ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதுபெற்ற இவர், 13 முறை கேரள அரசின் விருதுகளையும் 7 முறை ஆந்திர அரசின் விருதுகளையும் , ஒரு முறை ஒரிசாஅரசின் விருதையும் பெற்றிருக்கிறார். இது தவிர கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர்விருது உட் பட பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

No comments:
Post a Comment