Monday, November 20, 2017

சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபட.

சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபட

நவகிரகங்களில் சனிபகவான் நீதி தவறாதவர். அவரவர் கர்மவினைகளுக்கு உரிய
பலனை தவறாமல் வழங்குபவர். கிரகங்களிலேயே ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் ஒருவரே. பொதுவாக சனிப் பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவா ர்கள். அப்படி பயப்படவேண்டிய அவசியமே இல்லை. சனி கிரகத்தினால் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பில் இருந்து விடுபட பல எளிய பரிகாரங்கள் உள்ளன.
ஒரு கைப்பிடி பச்சரிசியை எடுத்துக்கொண்டு, அதை நன்றாக பொடி செய்துகொள்ள வேண்டும். பிறகு சூரியனை வழிபடவேண்டும். சூரியனை வழிபட்ட பிறகு குளக்கரையிலோ மரத்தின் அடியிலோ உள்ள விநாயகரை மூன்றுமுறை வலம் வந்து வழிபட்டுவிட்டு, பொடித்த பச்சரிசி மாவை தரையில் போடவேண்டும். அப்படி போடும் மாவை எறும்புகள் எடுத்துச் செல்லும். குறிப்பாக வன்னிமரத்தின் அடியில் இருக்கும் விநாயகரை வலம் வருவது மிகவும் விசேஷம். பச்சரிசி மாவை எறும்பு கள் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். வீட்டு வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடவேண்டும் என்று சொல்வதுகூட இதற்குத்தான். இந்த பரிகாரத்தை எப்போதுமே தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது.
ஒருவருக்கு சனி தசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி வந்துவிடுகிறது. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குறிப்பாக அஷ்டமத்துச் சனி மிக வும் கஷ்டப்படுத்திவிடும். ஏழரைச் சனியின் பாதிப்பை விடவும் அஷ்டமத்து சனி மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவார். அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் ஏற்பட க்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியதிகளை க் கடைப்பிடித்தால், பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணை யில் தீபம் ஏற்றி வழிபடவும்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
விநாயகர் வழிபாடு செய்யலாம்.
அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு உதவலாம்.
சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமை யான பாதிப்புகள் விலகி விடும்.
பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டு ம்.
தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
கால்களால் நடக்க இயலாதவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யலாம்.
இந்த நியதிகளை முறையாக கடைப்பிடித்து, சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புக ளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...