Monday, November 20, 2017

நடிகரை அடுத்த முதல்வராக பாவித்து கட்டவுட் வைக்கிறார்கள்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர், டாக்டர்களை ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க சொல்கிறார். இரண்டு படங்கள் இயக்கியவுடன் பொருளாதார மேதையாகிவிட்ட டைரக்டர் இலவச மருத்துவம் வழங்க சொல்கிறார். ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த ரசிகர்கள் இந்த சமூக அக்கறையை சிலாகித்து நடிகரை அடுத்த முதல்வராக பாவித்து கட்டவுட் வைக்கிறார்கள்.
அந்நியன், இந்தியன், ரமணா, ஜோக்கர் போன்ற பல படங்களால் ஏற்படுத்த முடியாத மக்களின் மன மாற்றத்தை, மெர்சலின் ஒரு வசனமும், காட்சியும் ஏற்படுத்திவிடும் என்று எண்ணி அரசும் அரசியல்வாதிகளும் அவற்றை நீக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
சினிமாகாரர்கள் ஒரே வாரத்தில் பல கோடிகளை பார்த்துவிட, அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் காட்டிவிட, அன்றாடம் காய்ச்சியான தமிழ் குடிமகன் கைதட்டி ஆர்பரித்துவிட்டு அடுத்த வேளை சோறு பற்றிய தன் கவலையைத் தொடர்கிறான்.... அடுத்த படத்தில் வரும் சமூக புரட்சிக்காட்சியை எதிர்பார்த்தபடி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...