ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும் அவருடைய வாலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதற்கு ஒரு வரலாறு உள்ளது. பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார். குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லிக் கோபப்பட்டார். உடனே அனுமார் ‘வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை. நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு’ என்று சொன்னார். பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பலமுறை முயன்றும் முடியவில்லை. அப்போது ஆஞ்சநேயர் தான் வாயு புத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத்தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார்.
தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும் அனுமன் வாலையும் வணங்கினார். பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வ சக்திகளையும் மங்களத்தையும் அளித்தீர்களே! அதேபோல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார். அப்படியே அனுமாரும் வரம் அளித்தார். இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வழிபாட்டுச் செயல்முறை வருமாறு:-
அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனி வரை முடிக்க வேண்டும். அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்திப் பூஜை செய்ய வேண்டும். அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும். அப்படிச் செய்தால் #நினைத்த #காரியம்பலித்துப் #பூரணபலனும், #பெரும்பேறும்#கைகூடும்.
#ஸ்ரீராமஜெயம்
#ஸ்ரீராமஜெயம்
No comments:
Post a Comment