🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*அதிசய லிங்கங்கள்!*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*அதிசய லிங்கங்கள்!*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பெங்களூர் அருகில் சுமார் அறுபது கி மீ தூரத்தில் சிவகங்கா என்ற கிராமம் உள்ளது அங்கு நாம் பார்க்கப்போகும் லிங்கம் மலையடிவாரத்தில் ஒரு குகைக்குள் சுமார் ஐந்து அடி உயரத்துடன் காணப்படுகிறது இந்த லிங்கரூபத்தின் பெயர் கவி கங்காதீஸ்வரர் இங்கு பூஜை செய்ய வருபவர் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்கிறார் அந்த அபிஷேகம் முடிந்தவுடன் அந்த நெய் வெண்ணெயாக மாறிவிடுகிறது அந்த வெண்ணெயைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கேரளாவில் திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் கோயிலிலும் சிவலிங்கம் இருக்கிறது பெயரும் வடக்குநாதர் தான் இங்கு பல்லாண்டுகளாக நெய் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் லிங்கமே தெரியாமல் சுமார் நாலு அடி உயரத்திற்கு லிங்கம் வளர்ந்து விட்டது இதில் இருக்கும் அதிசயம் என்னவென்றால் எத்தனை உஷ்ணமாக இருந்தாலும் .நல்ல கோடைக்காலத்திலும் அந்த நெய் உருகாமல் அமர்நாத் லிங்கம் போல் காட்சியளிக்கிறது
🌺🌺🌺🌺🌺🌺🌺
தஞ்சாவூர் அருகே குடவாசல் என்ற இடம் .அதன் அருகில் நாலூர் திருமயானம் என்ற இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதன் மேற்பகுதியைப்பார்த்தால் பலாப்பழத்தின் மேல் பாகம் போன்று முள்ளு முள்ளாக உள்ளது இந்த லிங்கத்தின் பெயர் பிலாச வனேஸ்வரர் அமர்நாத் லிங்கம் பனி லிங்கமாக காட்சியளிக்கிறது இது சந்திரனைப்போலவே பௌர்ணமியின் போது முழுமையாகவும் பின் அமாவாசை வர வர குறைந்து மறைகிறது பின் திரும்பவும் அடுத்த பௌர்ணமியில் முழுசந்திரன் போல் பிரகாசிக்கிறதாம் காசியில் அனுமன் காட் என்ற இடத்திற்குப்போனால் சிவபெருமான் அம்பிகை மடியில் சயனித்திருக்கும் காட்சியைக் காணலாம் இந்தக்கோயிலின் பெயர் “காமகோடீஸ்வரர் ” கோயில்
🌻🌻🌻🌻🌻🌻🌻
இதே போல் சிவன் விஷ்ணு போல் பள்ளிக்கொண்ட க் காட்சியை ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் காணமுடிகிறது
🍁🍁🍁🍁🍁🍁🍁
மஹாராஷ்டிராவில் எல்லோரா குகை அருகே “குஸ்மேஸம் “என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது அது எப்படி கெட்டியாக உடையாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது நீடூரில் அருள் புரியும் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் அருட்சோமநாதர் இந்த சுவாமியை ஒரு நண்டு தினமும் வணங்கி வந்ததாம்
திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலில் இருக்கும் சிவபெருமான் அருள் மிகு சந்திரமௌலீஸ்வரர் . இவர் மும்முகம் கொண்ட லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் .கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் ,வடக்கு முகம் வாமதேவ முகம் தெற்கு முகம் அகோர மூர்த்தியாக அருள் புரிகிறார் , திருநல்லூரில் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் இருக்கிறது பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்துக்கொண்டு
இந்தச்சிவலிங்கத்தைப்பூஜித்தாராம் இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர் காக்கும் கடவுள் வீஷ்னுவும் சிவனைப்பூஜித்த இடம் ஒன்று உண்டு அதுவே தலைச்சங்காடு . இங்கு திருமால் சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப்பெற்றார் ,இதனால் ஈசன் சங்கு வடிவில் மூலவராக அருள் புரிகிறார் பெயரும் சங்காரேண்யஸ்வரர் .
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் இதேபோல் இன்னும் பல வியக்குமளவுக்கு நம் நாட்டில் கோயில்கள் மண்டிக்கிடக்கின்றன அவைகளில் சில எண்ணெய் விட்டு விளக்கேற்ற க்கூட வசதியில்லாமல் இருண்டு கிடக்கின்றன பல புது கோயில்கள் கட்டுவதைக்குறைத்துக்கொண்டு இந்த பழமையான கோயில்களை நாம் பாதுகாப்பது நமது கடமையல்லவா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment