பிரதமர் & மத்திய அமைச்சக செயல்பாட்டில் ஜனாதிபதி தலையிட்டால் ஏற்பார்களா என்கிறார்கள்...
Dr ராஜேந்திர பிரசாத், Dr ராதாகிருஷ்ணன் ஆகியோர் காலங்களில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மோதல்கள் வந்துள்ளன. வாஜ்பாய் காலத்தில் கூட K R நாராயணன் ஒரு சட்ட முன் வடிவில் கை எழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். ஆட்சி பெரும்பான்மை இழந்தால் எதிர்க் கட்சிகள்தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும். ஆனால் நாராயணன், 'நம்பிக்கைத் தீர்மானத்தை' கொண்டுவருமாறு வாஜ்பாய்க்கு உத்தரவிட்டார்.
நேரு காலத்திலும் நேரு vs ராஜேந்திர பிரசாத்: நேரு vs ராதாகிருஷ்ணன் சில உரசல்கள் வந்தன என்று கேள்விப்படுகிறோம். இந்த வம்பே வேண்டாம் என்றுதான் இந்திரா, ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்புத் தர மறுத்தார். காங்கிரஸ் தலைமையால் முன் மொழியப்பட்ட சஞ்ஜீவ ரெட்டியையும் இந்திரா புறக்கணித்து 'மனசாட்சி' வோட்டு போட வைத்து V V கிரியைக் கொண்டு வந்தார். அப்புறம் ஃபக்ருதீன் அலி அஹமது. இப்படி ஜனாதிபதி என்பவரை நீட்டிய இடத்தில் கையொப்பமிடும் 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக்கியவர் இந்திரா! அதனால்தான் அப்படிப் பார்த்தே பழகியதால் நமக்கு சுதந்திரமாக ஜனாதிபதிகள் செயல்பட்டு, பிரதமரையே கேள்வி கேட்ட சம்பவங்கள் மறந்து விடுகின்றன.!

No comments:
Post a Comment