நிலக்கடலையில் பால் (Ground Nut Milk) தயாரித்து தினமும் குடித்து வந்தால்
நிலக்கடலை பாலில் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?
அனைவருக்கும் நோயில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கி றது. ஆனால் அது முடிகிறதா? இல்லை. ஆரோக்கியம் அல்லாத
பாணம் மற்றும் உணவுகளை உண்டு நாமாக தேடிக் கொள்ளும் வியாதிகள் பல என்றாலும் தானாக தேடி வரும் வியாதிகளும் பல இருக்கத்தான் செய்கின்றன• ஆனால் இந்த நிலக்கடலையி ல் பால் தயாரித்து தினமும் குடித்து வந்தால் அது சுவையாக இரு ப்பதோடு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக வும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நட்ஸ் வகைகளில் ஒன்றான நிலக்கடலை, அனைவருமே விரும்பும் ஒரு சிறந்த உணவு ப்பொருளாகும். எனவே நில க்கடலையில் பால் தயாரிப்பது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நிலக்கடலை – 1 கப்
முந்திரி – 5
ஏலக்காய் – சிறிதளவு
முந்திரி – 5
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை
நிலக்கடலை மற்றும் முந்திரியை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின் இந்த நிலக்கடலையை ஒரு துணியில் கட்டி, அதோடு ஊற வைத்த முந்திரி யையும் சேர்த்து, முளைக்கட்ட விட வேண்டும்.
முளைக்கட்டிய நிலக்கடலை மற்றும் முந்திரியை நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது ஏலக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான ஆரோக்கியமான நிலக்கடலைப் பால் ரெடி.
நிலக்கடலை பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நிலக்கடலைக்கு அனைத்து விதமான ரத்தக் கசிவை தடுக்கு ம் ஆற்றல் உள்ளது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலை பாலைக் குடித்து வந்தால், அதிக அளவில் ஏற்படும் ரத்த ப்போக்கைத் தடுக்கிறது.
நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் E, நியாசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் நமது மூளை சுறுசுறுப்பாகவும், எலும்புகள் வலிமை யாகவும் இருக்க வைக்கிறது.
நிலக்கடலையில் இருக்கும் நியாசின் புண்கள் மற்றும் கொப்புள ங்கள் வராமல் தடுப்பதோடு, நமது சருமத்தைப் பளபளப்போடு வைத்துக் கொள்கிறது.
உடல்பருமன் அதிகமாக உள்ளவர்கள், சாப்பிடுவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் 1 கைப்பிடி அளவு வறுத்த நிலக்கடலை யை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது நாம் அதிகளவில் உணவு களை சாப்பிடுவதை தடுத்து, உடல் பருமனையும் குறைக்கிறது.
No comments:
Post a Comment