(குறைவான மதிப்பெண் எடுத்த 11ம் வகுப்பு மாணவிகளை திட்டினாலோ அடித்தாலோ மனமுடைந்துவிடும் என்பதற்காக பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால் மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.அதன்பிறகு ஆசிரியரின் நிலை)
இதனால் மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.அதன்பிறகு ஆசிரியரின் நிலை)
*சீன்1*
"என்னப்பா அது?"
"சார்.. அது வந்து.."
" சொல்லுப்பா"
"பிட்டு சார்.. ஸாரி சார்"
"ஓ! ஒக்காருப்பா.. டெஸ்ட் எழுது"
"இனிமே பண்ணமாட்டேன் சார். மன்னிச்சிருங்க சார்"
"பரவால்லப்பா"
"திட்ட மாட்டிங்களா சார்"
"சே.. சே.. நல்லா இருப்பா"
*சீன் 2*
"என்னம்மா 5 மார்க் வாங்கிருக்க?"
"ஸாரி சார்.. படிக்கல சார்"
"போன எக்ஸாம்ல 10 வாங்கிருந்தியேம்மா.."
"மன்னிருச்சுருங்க சார்.."
"சே.. சே.. ஒக்காரும்மா. ரெஸ்ட் எடு"
*சீன் 3*
மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
"என்னடா இவரு இப்படி திருந்திட்டாரு"
"சே.. விட்றா ரொம்ப நல்லவரு!"
*சீன் 4*
வருட இறுதியில்..
"யோவ் வாத்தி என்னய்யா பாடம் நடத்தியிருக்க. எம்பொண்ணு இப்படி அநியாயமா பெயில் ஆயிட்டாளே.. எல். கே. ஜியில எல்லாம் A1 கிரேட் தானேடா வாங்குவா.. என்னை ஒரு நாள் ஸ்கூலுக்கு கூப்பிட்டு அனுப்பி சொல்லிருந்தா நானே படிக்க வச்சிருப்பேனே.. உன்னால தான்டா எல்லாம்"
"ஹி.. ஹி.. நல்லது சார்"
*என்னடா இவன் என்ன பண்ணாலும் இப்படி ரியாக்ட் பண்றான். ஜென் நிலைக்குப் போயிட்டானா? இல்ல.. லூஸு ஆயிட்டானா?*
(ஆசிரியர்களுக்கு உணவிடும் தெய்வங்களே மாணவர்கள்தான்.அவர்களின் முழு வளர்ச்சியிலும் பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே பெரும்பங்கு.
அதை உணர்ந்து செயல்படும் ஆசிரியர்களுக்கு தண்டனைகள்தான் பரிசு).
அதை உணர்ந்து செயல்படும் ஆசிரியர்களுக்கு தண்டனைகள்தான் பரிசு).
*ஆசிரியர் பணி முள் மேல்_ படுக்கையே.*
No comments:
Post a Comment