எப் எம் ரேடியோக்களில் தன்னுடைய பாட்டை பாடுவதற்கு ராயல்டி வேண்டும் என்று ராஜா கேட்கிறார் !!!
எஸ்பிபி நைட்ஸ் போன்ற மெகா ஷோக்களில் ராஜாவின் பாடல்களை பாடுவதற்கு ராயல்டி கேட்கிறார் !!!
செல்போன் கம்பெனிகள் ராஜாவின் பாட்டுக்களை காலர் டியூனாக போடுவதற்கு ராஜா காசு கேட்கிறார் !!!
இனிமேல் ராஜாவின் பாடலை கேட்க ஒவ்வொருவரும் பணம் கொடுத்தால் தான் கேட்க முடியும் என்பது ராஜா மேல் வீசும் எவ்வளவு வன்மமான வெறுப்பு பிரச்சாரம் என்பது இங்கே பலருக்கும் புரிவதில்லை.
அவர் எப்போதும் அவர் பாடல்களை கேட்கும் ரசிகனிடம் காசு கேட்டதில்லை கேட்கவும் போவதில்லை.
அவர் பாடல்களை வைத்து பணம் சம்பாதிப்பவர்களிடம் மட்டுமே ராயல்டி கேட்கிறார்.
இப்படி அபாண்டமாக ராஜா மீது வன்மத்தை கட்டவிழ்த்து விடும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ரஹ்மானின் பாடல்கள் அத்தனைக்கும் அவர் சத்தமில்லாமல் ஆரம்ப காலத்தில் இருந்தே ராயல்டி பெற்று வருகிறார் என்பது.
ஷேமநாத பாகவதர் உலகமெல்லாம் பாடி எல்லா நாட்டையும் அடிமைப்படுத்தினர் என்பதை கட்டுக்கதையாக திருவிளையாடல் படத்தில் சொன்ன போது புளகாங்கிதம் அடைந்த பலருக்கும் ராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்வது மட்டும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
முதல் மரியாதை படத்துக்கு இசையமைத்து விட்டு பாரதி ராஜாவிடம் என்னய்யா நீ சிவாஜியை வேஸ்ட் பண்ணிட்டியே ? என்று கேட்டு விட்டு படம் தேர்றது மாதிரி தெரியலன்னு சொல்லிவிட்டு போனாராம் என்று ஒரு கதை உலா வருது. இந்த படத்துக்கு காசு வேண்டாம் போன்னும் சொல்லிட்டாராம்னும் சொல்லி ராஜா மேல் வக்கிரத்தை ஏவி விடுகிறார்கள்.
சிவாஜியிடம் முதல் மரியாதையில் எப்படி சார் இவ்வளவு இயல்பா நடிச்சி இருக்கீங்க என்று கேட்ட போது நான் எங்கே நடிச்சேன் இப்படி நடந்து போங்க அங்க போய் உக்காருங்கன்னு சொன்னான் நானும் அப்படியே செய்தேன் நான் ஒன்னும் நடிக்கலையே என்று சொல்லி சிரித்த பேட்டி படித்திருக்கிறேன். அதைத்தானே ராஜா எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.
தனது நண்பனிடம் காசு வேண்டாம் என்று சொல்வது அவருடைய சொந்த விருப்பமல்லவா...
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது பாலச்சந்தருக்கு எப்போதுமே பிடிக்காது என்பதும் மணிரத்தினத்தின் வீட்டு கொலுவுக்கு ராஜாவின் குடும்பத்தினரை ஒரு போதும் அழைத்ததே இல்லை என்பதும் தெரியுமா ?
இந்த இரண்டுக்குமான காரணம் தெரிந்தால் மேலே ராஜாவின் மீது கட்டவிழ்த்து விடும் வெறுப்பு அரசியலுக்கும் உங்களுக்கு காரணம் தெரிந்து விடும்.
No comments:
Post a Comment