ஒரு சாமானிய மனிதனாக சில சந்தேகங்கள்.
1. ஒரு வழக்கில் ஆதாரங்களின் உண்மைத்தன்மை பரிசீலிக்கப்படுமா அல்லது அந்த ஆதாரங்களை யார் கையெழுத்திட்டது என்பதை பொறுத்து அவை பரிசீலிக்கப்படுமா? (மூத்த அதிகாரி கையெழுத்து போட்டால் ஓகே, இல்லையென்றால் .....)
2. 122 உரிமங்களை ரத்து செய்து 2012ல் வழங்கப்பட்ட #உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மிக முக்கியமான வாசகங்கள் - "The 122 licences for 2G spectrum were granted in arbitrary and unconstitutional manner".
"2G உரிமங்கள் தன்னிச்சையாகவும் அரசியல் சட்டத்திற்கு புறம்பாகவும் வழங்கப்பட்டுள்ளன".
அரசியல் சட்டத்திற்கு புறம்பாக உரிமங்களை வழங்குவது குற்றம் இல்லையா? பிறகு எதுதான் குற்றம்? சிக்னலை தாண்டி வண்டியை நிறுத்துவதா அல்லது டிக்கெட் விலை போக மீதம் ஒரு ரூபாயை பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா? அல்லது வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி காட்டில் சுள்ளி பொறுக்குவதா?
No comments:
Post a Comment