Monday, December 25, 2017

அம்மா கணக்கு ! ஜஸ்ட் மிஸ் செயல் தலைவரே !

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல் ஜெ ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார்.
அதன் பிறகு 2016 மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 96,269 வாக்குகள் பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம், 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்
தற்பொழுது டி டி வி தினகரன் 89013 வாக்குகளும் , அதிமுக மதுசூதனன் 48306 வாக்குகளும் பெற்று மொத்தமாக அதிமுகவின் ஜெ.ஜெயலலிதா விட்டு சென்ற ஓட்டுகளையே 1,37,319 மொததமாக வாங்கி உள்ளனர் . இரண்டாம் முறையாக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா போட்டியிட்ட போது பெற்ற வாக்குகளில் இருந்து கிட்டத்ட்ட 40000 அதிமுக வாக்குகள் மாறி அவற்றை திமுக பெற்று இருந்து இருக்கிறது என்பது தெளிவாக உணர முடிகிறது இன்று திமுக வின் தேர்தல் செயல்பாடுகள் சரியாக இருந்து இருந்தால் அந்த 40000 வாக்குகளை தக்க வைத்து கொண்டு இருக்கலாம் .
-

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...