அதாவது மு க ஸ்டாலினே TTVயிடம் ரகசிய உடன்பாடு கொண்டு, அதிமுகவை வீழ்த்த, ஒத்துழைத்து இருப்பார் என்று விஷயங்கள் வருகின்றன. அது உண்மையானால் அதைவிடப் பெரிய அரசியல் தற்கொலை முடிவு வேறு எதுவும் இருக்காது.
தன் கட்சிக்கு டெபாசிட் போனாலும் பரவாயில்லை: தினகரனே வந்தாலும் வரட்டும் என்ற முடிவை எடுத்து, TTV க்கு ரகசிய ஆதரவு ஸ்டாலின் கொடுப்பாரா என்ன?
தன் கட்சிக்கு டெபாசிட் போனாலும் பரவாயில்லை: தினகரனே வந்தாலும் வரட்டும் என்ற முடிவை எடுத்து, TTV க்கு ரகசிய ஆதரவு ஸ்டாலின் கொடுப்பாரா என்ன?
எனக்குத் தெரிந்து கடைந்தெடுத்த முட்டாள் கூடத் தன் கட்சியை பலி போட்டு அப்படிச் செய்ய மாட்டான். கலைஞருக்கு மட்டும் அது தெரியவந்தால் வறுத்து எடுத்து விடுவார் - அதாவது புரியும் சக்தியுடன் இருந்தால்! காரணம் கலைஞர் தன் கட்சியை எக்காரணம் கொண்டும் COMPROMISE செய்பவரில்லை. வேண்டுமானால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தளத்தைச் சிறுகச் சிறுகக் குறைத்துக் கடைசியில் கரைத்து விடுவார் : அப்படி அந்தக் கட்சி கரைந்ததும், அவர்கள் வெளியேறும் படி அழுத்தம் கொடுத்து "அவர்களாகத்தானே வெளியே போனார்கள் - நாங்களா அனுப்பினோம்?"- என்று முன்னாள் கூட்டணிக் கட்சியைச் செல்லாக் காசாக்கி விடுவார். ஆனால் எக்காரணம் கொண்டும் திமுக POSITION ஐ விட்டுத் தரவே மாட்டார்.
எனவே ஸ்டாலின் இப்படித் தன் கட்சி வோட்டுகளை மடை மாற்றி, தினகரனுக்கு அனுப்பி, தன் கட்சி டெபாசிட்டைத் தானே பறிகொடுத்திருப்பார் என்பதை ஏற்க முடியவில்லை.
திமுகவின் ஆதரவு தளம் அரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. 7 கட்சியும் சேர்ந்து டெபாசிட் கூடப் பெறவில்லை என்பது மாபெரும் வீழ்ச்சி. சிம்லா முத்துச் சோழனுக்குச் சென்ற முறை விழுந்த வோட்டுகள் எங்கே போயின? போலி வாக்காளர்களை நீக்கியதால் ஏற்பட்ட இழப்பா?
"இந்து என்ற உணர்வோடு இருக்கும் எவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்"- என்று பேசியது வினையாகி விட்டதா?
நம்பகமற்ற கூட்டாளிகளைக் கூட்டணியில் சேர்த்த விளைவா? சென்ற ஆண்டு வரை - "திமுக / அதிமுக இரண்டும் இல்லாத " - என்ற மகத்தான கோஷத்துடன் 'மக்கள் நலக் கூட்டணி' கண்டவர்களை இம்முறை கூட சேர்த்ததால் மக்களுக்கு திமுக மீது ஏற்பட்ட சலிப்பா?
இதை எல்லாம் யோசிக்காமல் சும்மா BJP, நோட்டாவை விட குறைவா வோட்டு வாங்கியதை பெஞ்சு தட்டிக் கொண்டாடிக் கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் சின்னம் "அஸ்தமன சூரியன்" ஆகி விடும்.
திமுகவின் புதிய கூட்டாளிகளுக்கு - முன்னாள் மநகூ- வைகோ, திருமா, கம்யூ வகையறாக்களுக்கு - இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு இந்த மடம் விட்டால் சந்தை மடம்! விஜயகாந்தை ஒரு வழி பண்ணிட்டுதான் இங்கே வந்தாங்க - இப்ப இங்கேயும் ஒரு வழி ஆக்கிட்டாங்க. அடுத்து ரஜனியோ, கமலோ எவனாவது இளிச்ச வாயன் சிக்காமலா போவான்? அப்போது 'பஞ்ச பாண்டவர்' வேடம் போட்டு தர்மன், பீமன், அரச்சுனன், நகுலன், சகாதேவன் எல்லாம் கிளம்பிடுவாங்க!
அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை - டெபாசிட்டைத் தவிர: ஆனால் திமுகவுக்குப் பெறுவதற்கு ஒன்றுமில்லை - இவர்களது நட்பால்! ஆனால் இழப்பதற்கு ஒட்டு மொத்த எதிர்காலமே உள்ளது!! ஸ்டாலின் சுதாரிக்க வேண்டிய நேரம் இது!!
No comments:
Post a Comment