இன்று 20/12/2017 ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்தபோது, எடுத்ததாக கூறப்படும் ஒரு வீடியோவை தினகரன் வெற்றிவேல் மூலம் வெளியிட்டிருக்கிறார். இது விஷயமாக கருத்து தெரிவித்திருக்கும் ஸ்டாலின், " உடல் நலம் தேறிய ஜெயலலிதா மரணமடைந்தது எப்படி..? EPS, OPS பதிலளிக்க வேண்டும்" என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் இருந்தது சசிகலா; வேறு யாருமே ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது வீடியோவை வெளியிட்டிருப்பதும் சசிகலாவின் உறவினரான தினகரன்தான்.அதை அவர் சசிகலாவிடமிருந்து பெற்றுதான் வெளியிட்டிருக்க முடியும். அப்படியிருக்க ஜெயலலிதா இறந்தது எப்படி என சசிகலாவிடமோ தினகரனிடமோ கேட்காமல் EPS, OPS ஐ ஏன் கேட்கிறார் ஸ்டாலின்..?
தினகரன் திமுக வின் நிழலாக இருப்பதால்தான் இவ்விஷயத்தில் அவரைப் பற்றிய எவ்வித விமர்சனத்தையும் தவிர்க்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த அறிக்கையின் மூலம் தினகரன் திமுகவின் பின்னணியோடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக நிருபணமாகிறது.
அதிமுகவினரும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். தினகரனுக்கு அளிக்கிற வாக்கு திமுக விற்கு அளிக்கிற வாக்கே.
தினகரனை நம்பித்தான் இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமையும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். தினகரன் மூலம் அதிமுக வை உடைத்து தான் முதல்வராக எண்ணுகிறார் ஸ்டாலின்.
எச்சரிக்கையுடன் வாக்களியுங்கள்.
தினகரனையும் திமுக வையும் தோற்கடிக்கும் வகையில் வாக்களியுங்கள்.
தினகரனையும் திமுக வையும் தோற்கடிக்கும் வகையில் வாக்களியுங்கள்.
No comments:
Post a Comment