வளர்ந்து கொண்டே இருக்கும் அதிசய சிவலிங்கம் !!
ஆன்மிக அதிசயங்களை பொறுத்தவரை இந்த உலகில் இன்னும் பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான விடை தெரியாமல் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் வளர்ந்து கொண்டே இருக்கும் அதிசய சிவலிங்கத்தை பற்றி பார்ப்போம்........

எங்கு உள்ளது?
எங்கு உள்ளது?
🌖 இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் என்னும் மாவட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராம் மரோடா என்ற பகுதியில் பூதீஸ்வர் மகாதேவ் என்னும் இந்த அற்புதமான சிவலிங்கம் அமைந்துள்ளது.
தற்போதைய உயரம் என்ன?
🌖 இந்த சிவலிங்கமானது ஆண்டிற்கு ஆண்டு உயரத்திலும் சரி, அகலத்திலும் சரி வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. தற்சமயம் இது 18 அடி உயரமும், 20 அடி அகலமும் உள்ளது.
எப்பொழுது இதன் உயரம் கணக்கிடப்படுகிறது?
🌖 இந்த சிவலிங்கத்தின் அளவு வருடா வருடம் மஹாசிவராத்திரி அன்று அளக்கப்படுகிறது. அவ்வாறு அளக்கும்போது எப்போதும் 6 முதல் 8 இன்ச் வரை கூடுதலாக சிவலிங்கம் வளர்ந்திருக்கும்.
🌖 இந்த சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதுவரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் இருப்பது என்பது அதிசயிக்கத்தக்க விஷயமாக உள்ளது.
No comments:
Post a Comment