முன்னோர்களின் நுண்ணறிவும் நல்வழிப்பாதையும்:
கிராமத்தில் ஆடி மாதம் அம்மனுக்கு உரியது என்று சொல்வார்கள். எதனால் அப்படி சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஆடி மாதத்தில் மற்ற மாதங்களை விட காற்று அதிகமாக இருக்கும், "ஆடி காற்றுக்கு அம்மியும் நகரும்" என்று காற்றின் வேகத்தை நமக்கு நம் முன்னோர்கள் பழமொழியுன் மூலம் சொல்லிச்சென்றார்கள். ஆடி காத்துக்கு அம்மியே நகரும்போது ஊரில் உள்ள குப்பைகூலங்களுக்கு சொல்லவா வேண்டும்???. காற்றோடு குப்பைகூலங்கள் மட்டுமா போகும், தூசுகளோடு அதில் இருக்கும் பல்வேறு நோய்களை கொடுக்கும் நோய்க்காரணிகளும் அல்லவா காற்றோடு செல்லும். காற்றோடு வரும் நோய்களை தடுக்க என்ன வழி??? இருக்கவே இருக்கு இயற்கை நோய் தடுப்பான் நம்ம"வேப்பிலை". வேப்பிலையை ஊருக்கு வெளியே கட்டினார்கள், வீட்டுக்குவீடு வேப்பிலை தோரணம் கட்டினார்கள். இதை ஒருவர் மட்டுமே செய்ய முடியுமா, ஊரே சேர்ந்து செய்தால்,வேறென்ன ஊர் கூடினால் திருவிழா தான். சரி நோய் வராமல் காத்துட்டோம், ஊருக்குள்ள ஏதேனும் நோய் இருந்தால்? எடு மஞ்சளை, திருவிழாவின் கடைசி நாள் மஞ்சள் நீராடல். சரி வேப்பிலையினைங்க ,மஞ்சள்ன்னு சொன்னிங்க ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கலாம் மாதிரி இருக்கு ஆனா கோவில் , செவ்வாய் , வெள்ளிக்கிழமை என்பதை பார்த்தால் மூடநம்பிக்கை மாதிரி தான் தெரியுதுன்னு அறிவு ஜீவிகள் கேட்கலாம், ஆனால் எங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. நம் பூமிக்கு அருகில் உள்ள கோள்கள் இந்த பக்கம் வெள்ளி, அந்த பக்கம் செவ்வாய். மற்ற கோள்களில் இருந்து வரும் ஒளிகதிர்கள் மற்றும் கதிர் வீச்சுகளை விட வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்களில் இருந்து வரும் ஒளிகதிர்கள் மற்றும் கதிர் வீச்சுகள் அதிகமாக இருக்கும் காரணம் அருகில் இருப்பதால்தான், சற்று கூர்ந்து கவனித்தால் அந்த மாற்றத்தை நாம் உணர முடியும். இந்தகோள்களில் இருந்து வரும் ஒளிகதிர்கள் மற்றும் கதிர் வீச்சுகளில் நன்மை மற்றும் தீமை தருவதும் இருக்கும். நன்மை தரும் கதிர் வீச்சுகளை மட்டும் பிரித்து நம் உடல் ஏற்றுக்கொள்ள நாம் செல்லும் இடம் தான் கோவில், மருத்துவமனை போகிறோமே அதுபோல தான். கோவில்களில் மஞ்சள், வேப்பிலை,குங்குமம் மட்டுமா இருக்கு??? கோவில்களில் நல்ல அலைகள் இருக்கு, நன்மை தரும் கதிர் வீச்சுகள் நிறைந்துள்ளது, ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் 'நோய் வந்தால் மருத்துவமனை, நோய் வராமல் காக்க கோவில்' . வேப்பிலையும் மஞ்சளும் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பது நம் முன்னோர்களுக்கு தெரிந்தது, அது இன்று வேற்றுநாடுகளுக்கு கூட தெரிகிறது, ஆனால் நாம் மட்டும் விட்டுவிட்டோம். காரணம் மூடநம்பிக்கை மூடநம்பிக்கை என்று சொல்லிச்சொல்லியே நமது முன்னோர்கள் சொல்லியதை நாம் குப்பை போல ஒதுக்கியே வைத்துள்ளோம். முன்னோர்கள் சொல்லி சென்றது குப்பைகள் அல்ல, அவை நம்மை (உள்ளத்தையும், மனதையும்) தூய்மைப்படுத்தும் அரும்மருந்துகள். ஓர் கருவில் இருந்து நல்ல குணநலன்கள் நிறைந்த ஒரு உயிர் உருவாகி, நன்றாக பிறப்பதில் இருந்து, இறுதி வரை முன்னோர்களின் வழிகாட்டுதல் தொடர்கிறது.நாம் குழந்தைக்கு கையில் வசம்பு காப்பு கட்டி விடுவதை பார்த்திருப்போம் அது எதற்கு தெரியுமா , குழந்தையின் ஜீரண தன்மையை நெறிப்படுத்ததான். குழந்தை கைகால்களை ஆட்டும்பொது கையில் இருக்கும் வசம்பை வாயில் வைக்கும்பொது வசம்பு உமில்நீரோடு சேர்ந்து ஜீரணத்தன்மையை அதிகப்பட்டுதுகின்றது, வசம்புநீர் நாவில் படுவதால் நாக்கு நன்றாக சுழட்டமுடியும்,அதனால் குழந்தை நன்றாக பேச முடியும்,இதுபோல நமக்கு நல்வழியை காட்டுவதையே முக்கிய பொறுப்பாக ஏற்று நமக்கு நல்ல கருத்துக்களையும், காலநிலைக்கு ஏற்ப எப்போது எப்படி நடக்க வேண்டும் என்ற நல் அறிவுரைகளை முன்னோர்கள் நமக்கு பலமொழியின் மூலமாக நமக்கு நல்வழிப்பாதையை அமைத்துச்சென்றுள்ளனர். பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிச்சொல்லியே நம் பாட்டன் புட்டன் சொன்ன நல்ல கருத்துக்களை நாம் கண்டுக்காமல் விட்டுவிட்டோம்,இனியாவது நாம் நம் முன்னோர்களின் வழியில் நடப்போம். மூடநம்பிக்கை என்று சொல்பவர்கள் சொல்லிகொள்ளட்டும்,அவர்களுக்கும் சேர்த்தே நாம் நம் முன்னோர்களின் பாதையில் பயணிப்போம்.
வாழ்க வளமுடன் !!!

No comments:
Post a Comment